வடக்கு கிழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர்!!!

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம். சுமந்திரன், கந்தர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா, எஸ். சிறிதரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உள்ளிட்டோர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக் கட்சி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார், சில்வஸ்ரின் அலன்ரீன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை யாழ் மாநகர சபையின் மேயர் யோகேஸ்வரி பற்குணராசா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் போட்டியிடுகின்றார்.
முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் இம்முறையும் போட்டியிடுகின்றார்.
இதேவேளை ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் முன்னாள் போராளிகள் ஜனநாயகக் கட்சியினர் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாருக் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் ஆகியோர் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்