இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சக்தி ஆலயங்களில் ஒன்றான நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் பங்கேற்றிருந்தனர்.
நயினா தீவில் எழுந்தருளி இருக்கும் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் திருவிழா கடந்த 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இந்தக் கோவில் 18 மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வீழ்ந்த பீடமாகவும், தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்பு வீழ்ந்த பீடமாகவும் கருதப்படுகின்றது.
14 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற திருவிழாவின் தேர்த் திருவிழா இன்றாகும்.
விநாயகப் பெருமானும், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானும், நாகபூசணி அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட முத்தேரில் எழுந்தருளி பக்த அடியார்களுக்கு அருள் பாலித்தனர்.
பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் முத்தேரில் அம்பாள் உள்ளிட்ட தெய்வங்கள் வலம்வந்த காட்சியை காண்பதற்காக பக்தர்கள் கோவிலெங்கும் கூடியிருந்தனர்.
பக்தர்கள் சூழ்ந்து வர பார்வதியாள் நயினை நாகபூஷணி அம்பாள் வலம் வந்தருள்புரியும் கட்சி.(30.06.2015)