கிளி.மாவட்டத்தில் 17,344 வீடுகள் தேவை ; மீள்குடியேற்ற அமைச்சரிடம் அரச அதிபர் சுட்டிக்காட்டு!!!


கிளி.மாவட்டத்தில் 17,344 வீடுகள் தேவை ; மீள்குடியேற்ற அமைச்சரிடம் அரச அதிபர் சுட்டிக்காட்டு
Add caption
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் 17 ஆயிரத்து 344 வீடுகள் தேவையாக உள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்  தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்  கலந்துகொண்ட மீள்குடியேற்றம்  தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 41 ஆயிரத்து 613 குடும்பங்கள் இன்றுவரை மீள்குடியேறியுள்ளனர். மீள்குடியேறியவர்களில் 17 ஆயிரத்து 344 வீடுகள் இன்னமும்  கட்டிக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.

அவர்களில் 475 குடும்பங்களுடைய வீடுகள் திருத்தம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. ஆயிரத்து 756 குடும்பங்களுக்கு நிரந்தர கழிப்பறைகளும்  475 குடும்பங்களுக்கு கழிப்பறைகள்  திருத்திக் கொடுக்க வேண்டிய நிலையிலும் உள்ளதாக அரச அதிபர் குறிப்பிட்டார்.

இதனைவிட 226 புதிய பொதுக்கிணறுகள்  அமைக்க வேண்டியதுடன்  32 பொதுக்கிணறுகளும் திருத்த வேண்டியுள்ளன. அத்துடன்  கிளிநொச்சி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 475 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும்  வழங்க வேண்டியுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.