விடுதலைப்புலிகளின் சரணடைவு தொடர்பான விசேட மாநாடு- சாட்சியமளித்தவர்கள் கண்ணீருடன் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்

ஐக்கியநாடுகள்சபையில் விடுதலைப்புலிகளின் சரணடைவு தொடர்பான விசேட மாநாட்டை ஒட்டிய கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் மகனும், சமாதானச் செயலாளரான புலித்தேவனின் மனைவியும், நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் மலரவனின் மனைவியும் இதில் கலந்து கொண்டு கண்ிருடன் சாட்சியமளித்துள்ளர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான காரியாலத்தியில் அமைந்துள்ள விசேட அறையொன்றில் இன்று சுவிஸ் நாட்டின் நேரப்படி 5.30 மணியளவில் இவ்விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு சாட்சியமளித்தவர்கள் கண்ணீருடன் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் கருத்து தெரிவித்த நடேசனின் மகன், தனது தந்தை சரணடையும் முன்னர் தன்னிடம் தகவல் தெரிவித்து விட்டு சென்றதாக கூறியுள்ளார்.
‘அப்பாவுடன் நான் 15ம் திகதி கதைக்கும்போது சொன்னார். சிலவேளைகளில் நாங்கள் சரணடைய வேண்டி வரலாமென. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறினார். பலதரப்பினருடனும் கதைத்தாக கூறினார். ஆனால் யார் மூலம் இதற்கான ஏற்பாடுகளை செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் சந்திரகாந்தன் சந்திரநேருவுடன் இறுதிவரை தொடர்பில் இருந்தார் என்பது தெரியும். 18ம் திகதி அதிகாலை சரணடைய புறப்படும்போது, நாங்கள் சரணடைய புறப்படுகிறோம்’ எனக்கூறிவிட்டு புறப்பட்டார் என்றார்.
புலித்தேவன், மலரவனின் மனைவிகள்
புலித்தேவன் மனைவி, மற்றும் மலரவனின் மனைவி.

அங்கு சாட்சியமளித்த புலித்தேவனின் மனைவி- ‘நான் 17ம் திகதியே மக்களுடன் மக்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துவிட்டேன். நடேசன், பலித்தேவன் உள்ளிட்டவர்கள் சரணடையும் ஏற்பாட்டுடன் இருந்தார்கள். எனினும், அதற்கு முதல்நாளே நான் வந்துவிட்டேன்.
அதன்பின்னர் வவுனியா முகாமிற்கு சென்றேன். அதன்பின்னர் பத்திரிகைகளில் பார்த்தே அவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை அறிந்தேன். பின்னர் வெள்ளைக்கொடி விவகார அறிக்கையை படித்தே நடந்தவற்றை தெரிந்து கொண்டேன்.
நாங்கள் சரணடைந்த சமயத்தில் எங்களுடன் வந்த பெண்போராளிகளை இராணுவம் தனியே அழைத்து சென்றதை என் கண்களால் கண்டேன்” என்றார்.
விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் மலரவனின் மனைவி சாட்சியமளித்தார். ‘ஏராளம் போராளிகள் சரணடைந்ததை நான் கண்ணால் கண்டேன். அவர்களில் சிலர் எழிலன், குமரன், தங்கையா, நாகேஸ்.
நாங்கள் சரணடைந்தபோது, விடுதலைப்புலிகளின் சீருடையிலும், இராணுவசீருடையிலும் பலர் காவலரணின் நின்றனர். அவர்கள் சரணடைந்தவர்களை பெயர் சொல்லி கூப்பிட்டார்கள். என் கணவரையும் பெயர் சொல்லித்தான் அழைத்தனர். கணவருடன் நான் சென்றபோது, எனக்கு இராணுவம் வயரால் அடித்து கலைத்தது.
எனது கணவர் உள்ளிட்ட புலிகளின் சரணடைவிற்கு யாராவது உத்தரவாதம் வழங்கினார்களா என்பது தெரியவில்லை’ என்றார்.
அத்துடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரின் புகைப்படங்களையும் ஐ.நா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

sa 1 ilancheran
இளஞ்சேரன்
sa 2 nagesh
நாகேஸ்
sa 3 piriyan
பிரியன்
sa 4 thangaiya
தங்கையா
sa 5 uthayan nalini
உதயன், நளினி
sa 6 vijitharan
விஜிதரன்