யாழ்ப்பாணத்தில்
ரவுடித்தனமும் பெண்களைக் கேலிசெய்தல், பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபடல்,
இவற்றைத் தட்டிக் கேட்கும் பெண்பிள்ளைகளின் பெற்றோர்,
சகோதரர்களைத் தாக்குவது போன்ற செயல்கள் அத்துமீறிக்கொண்டிருக்கின்றன.
அத்துடன்
போதைப்பொருள்பாவனை, கஞ்சா, மதுபாவனையும் இளைஞர்களிடத்தில் அதிகரித்துக்
கொண்டிருக்கின்றன. இவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை எமது இணையத்தளத்தின்
புலனாய்வு ஊடகவியலாளர்கள் சேகரித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களை
அடையாளப்படுத்தி புகைப்படங்களுடன் அவர்களின் பெயர், விபரம்
குடும்பத்தவர்களின் பெயர் விபரங்களுடன் இங்கு வெளியிட ஆயத்தமாகிக்
கொண்டிருக்கின்றோம்.
எமக்கு
கிடைத்த புகைப்படங்கள், மற்றும் தகவல்களின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக
மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலதரப்பட்ட சமூகவிரோதச் செயல்களில்
ஈடுபடுபவர்களின் தகவல்கள் துல்லியமாகக் கிடைக்கப்பெற்றுள்ளன. இனி வரும்
காலம் இவர்கள் திருந்தி நடக்காவிடின் இவர்களது அனைத்து விபரங்களும்
வெளியிடப்படும்.
இங்கே
முதற்கட்டமாக யாழ் கைதடிப் பகுதியில் காவாலித்தனம் புரிந்து மாணவிகளுடன்
சில்மிசம் புரியும் நபர்களின் புகைப்படங்களை பெயர் விபரத்துடன்
வெளியிட்டுள்ளோம். இவர்கள் இனியும் திருந்தாதுவிடின் இவர்களுக்கான
நடவடிக்கைகளைப் பொதுமக்களே எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அப்பகுதி
மக்களே தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இவர்கள்
மாணவிகளைப் பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவது, போதைப்பொருள்பாவனை,
ரவுடித்தனம் போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் ஆதாரத்துடன்
தெரிவித்துள்ளனர். இவர்கள் இனியும் திருந்தா விடின் இவர்களுக்கான
நடவடிக்கைகள் வெகு விரைவில் ஆரம்பமாகும் எனவும் அப்பகுதி மக்கள்
தெரிவித்துள்ளனர்.
இதே போன்று மானிப்பாய்,
ஆணைக்கோட்டை போன்ற இடங்களில் காவாலிகளாகத் திரிபவர்களின் புகைப்படங்களும் கிடைத்துள்ளன என்பதையும் தெரிவித்துள்ளோம்.
நன்றி இணையம்