முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த(2015) வைகாசிப்பொங்கல் விழா!!!

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று திங்கட்கிழமை(01) பெரு விமர்சையாக நடைபெற்றது.
குறித்த பொங்கல் உற்சவத்தில் கலந்துகொள்வதற்காகவும் தமது நேர்த்திக்கடன்களை தீர்ப்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் வருகை தந்திருந்தனர்.
பக்தர்கள் காவடிகள் பாற்செம்புகள் கற்பூர சட்டிகள் எடுத்தும் தமது நேர்திக்கடன்களை செலுத்தியிருந்தனர்.
()