சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுவதனை மக்கள் விரும்ப மாட்டார்கள் - பிரதமர்!!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்டுப்படைகளின் கட்டளைத் தளதி ஜகத் ஜயசூரியவின் ஊடாக முப்படைகளின் தளபதிகளுக்கும் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தின் விசேட தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்:-
சொந்த நாட்டில் சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுவதனை மக்கள் விரும்ப மாட்டார்கள் - பிரதமர்

சொந்த நாட்டில் சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுவதனை மக்கள் விரும்ப மாட்டார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் படைத் தளபதிகளுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ராஜாங்கச் செயலாளரின் இலங்கை விஜயம் பற்றி படைத்தளபதிகள் அறிந்தீர்பார்கள் என அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராஜாங்க செயலாளருடன் நடத்திய சந்திப்பின் போது அவரது நிலைப்பாடு குறித்து படைத்தளபதிகளுக்கு தெளிவுபடுத்த உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

'சொந்த நாட்டில் பல்வேறு இடங்களில் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்களாயின் அவ்வாறான நாட்டில் வாழ்வதற்கு நாம் விரும்ப மாட்டோம்' என பிரதமர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் பாரியளவில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தின் முக்கிய கடல் வழிப்பாதையின் ஒரு பகுதியை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு இலங்கைக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இணைந்து கொண்டு பங்களிப்பு வழங்கும் பொறுப்பு இலங்கைப் படையினருக்கு என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த களத்தை விட்டு வெளியே ஆற்றக் கூடிய பணிகளுக்கு பூரண அளவில் ஒத்துழைப்பினை வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்டுப்படைகளின் கட்டளைத் தளதி ஜகத் ஜயசூரியவின் ஊடாக முப்படைகளின் தளபதிகளுக்கும் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தின்  விசேட தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்: