சீ­ர­ழி­வு­களை நோக்கி யாழ். குடா­நாடு!!!

யாழ். குடா­நாட்டில் கோஷ்­டி­ மோ­தல்கள், குழு­வி­ன­ருக்­கி­டை­யி­லான சண்­டைகள் உட்­பட வன்­மு­றைச்­ சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

யுத்த காலத்தின் போது குடா­நாட்டில் சமூ­கங்கள் மத்­தியில் ஒழுக்­கச்­சீர்­கே­டான நட­வ­டிக்­கைகள் இடம் பெற்­றி­ருக்­க­வில்லை.

ஆனால் யுத்தம் நிறை­வ­டைந்து தற்­போது அமைதி திரும்­பி­யுள்ள நிலையில் குடா­நாட்டில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் பெரு­கி­வ­ரு­கின்­றமை அப்­ப­குதி மக்கள் மத்­தியில் பெரும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

நாள்­தோறும் குழுக்­க­ளுக்­கி­டையி­லான மோதல்­களும் வன்­முறைச்­சம்­ப­வங்­களும் அதி­க­ரித்து வரு­கின்­றன. கொள்ளை, பாலியல் வல்­லு­றவு உட்­பட கலா­சார சீ­ர­ழி­வு­களை நோக்கி யாழ். குடா­நாடு சென்று கொண்­டி­ருக்­கின்­றது.

யாழ்ப்­பாணம், மானிப்பாய் சுது­மலைப்­ப­கு­தியில் கடந்த சனிக்­கி­ழமை இரவு இசை நிகழ்ச்­சி­யொன்­றுக்கு சென்று விட்டு திரும்­பிக்­கொண்­டி­ருந்த யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் 9 பேர் மீது மோட்டார் சைக்­கிள்­களில் வந்த கோஷ்­டி­யொன்று நடத்­திய வாள்­வெட்டுத் தாக்­கு­தலில் மாணவன் ஒரு­வ­ரது கை துண்­டா­ன­துடன் மேலும் இரு மாண­வர்கள் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர்.

இந்தக் கொலை வெறிக்­கும்பல் இந்த தாக்­குதல் நடத்­தும்­போது மாண­வர்­களில் சிலர் தப்­பி­யோ­டி­வி­டவே மூன்று மாண­வர்கள் அந்த வாள்­வெட்­டுக்கு இலக்­கா­கி­யுள்­ளனர்.

பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலைப்­பீ­டத்தில் இரண்டாம் வரு­டத்தில் கல்­வி­கற்கும் வவு­னியா மாவட்­டத்தை சேர்ந்த முர­ளி­தரன் என்ற மாண­வனின் கையே துண்­டா­டப்­பட்­டுள்­ளது.

அவர் பலத்த வெட்­டுக்­கா­யங்­க­ளுக்கு இலக்­கா­கி­யுள்ளார். அதே பீடத்தில் கல்வி கற்கும் வவு­னி­யாவைச் சேர்ந்த ரஜீபன் மற்றும் முல்­லைத்­தீவை சேர்ந்த ஜெப­தர்ஷன் ஆகி­யோரும் இந்த வாள் வெட்டு சம்­ப­வத்தில் காய­ம­டைந்­துள்­ளனர்.

இந்த வாள் வெட்டு சம்­ப­வத்­திற்கு இலக்­காகி கீழே விழுந்த மாணவன் ஒரு­வ­ருக்கு அருகில் வந்த அந்தக் கும்­பலைச் சேர்ந்த ஒருவர் காய­ம­டைந்த மாண­வனின் தலைக்­க­வ­சத்தை கழற்­று­மாறு கடு­மை­யாக மிரட்­டி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து மாணவன் தலைக்­கவ­சத்தைக் கழற்­றி­ய­போது தாங்கள் வெட்­டு­வ­தற்­காக வந்­த­வர்கள் இவர் இல்லை எனத் தெரி­வித்து விட்டு அந்தக் கும்பல் அவ்­வி­டத்தை விட்டு சென்­றுள்­ளது.

இந்­தச்­சம்­ப­வத்தை அடுத்து யாழ். பல்­க­லைக்­க­ழக கலைப்­பீட மாண­வர்கள் நேற்று முன்­தினம் முதல் வகுப்பு பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டுள்­ளனர்.

தாக்­குதல் நடத்­தி­ய­வர்­களை கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரியும் யாழ்ப்­பா­ணத்தில் இடம் பெற்று வரும் கோஷ்டி மோதல்கள், வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களை உட­ன­டி­யாக தடுத்து நிறுத்தக் கோரி­யுமே மாண­வர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­துடன் வகுப்பு பகிஷ்­க­ரிப்­பிலும் ஈடு­பட்­டுள்­ளனர்.

இதேபோல் யாழ்ப்­பாணம், பருத்­தித்­துறை, அல்­வாய்ப்­ப­கு­தியில் கடந்த சனிக்­கி­ழமை குடும்­பஸ்தர் ஒருவர் அடித்­துக்­கொல்­லப்­பட்­டுள்ளார். அல்வாய் கிரா­மத்தை சேர்ந்த சின்­னத்­தம்பி திருச்­செல்வம் (வயது 46) என்ற இரண்டு பிள்­ளை­களின் தந்­தையே இவ்­வாறு அடித்துக் கொல்­லப்­பட்­ட­வ­ராவார்.

குறித்த கொலை சம்­ப­வத்­தினை அப்­ப­கு­தியில் இயங்கி வரும் குழு­வொன்றே மேற்­கொண்­ட­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது.

இந்தக் கொலைச்­சம்­ப­வத்தை கண்­டித்தும் சம்­ப­வத்தில் ஈடு­பட்ட குழு­வி­னரை கைது செய்­யு­மாறு வலி­யு­றுத்­தியும் நேற்று முன்­தினம் இப்­ப­குதி மக்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இந்த மக்கள் உயி­ரி­ழந்­த­வரின் சட­லத்­துடன் அவ­ரு­டைய வீட்­டி­லி­ருந்து அல்வாய் நாவ­லடி பகு­தி­வரை ஊர்­வ­ல­மாக வந்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இவ்­வாறு குடா­நாட்டில் கடந்த சனிக்­கிழமை மட்டும் இத்­த­கைய இரண்டு வன்­மு­றைச்­சம்­ப­வங்கள் இடம் பெற்­றி­ருக்­கின்­றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து வடக்கில் இடம் பெயர்ந்த மக்கள் படிப்­ப­டி­யாக மீள குடி­யேற்­றப்­பட்டு வந்­தனர்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே யாழ். குடா­நாட்டில் இத்­த­கைய குழுச்­சண்­டைகள் மற்றும் கொள்­ளைச்­சம்­ப­வங்கள், பாலியல் வல்­லு­றவுச் சம்­ப­வங்கள் போன்­றன அதி­க­ரித்து வந்­தன.

தற்­போது அந்த நிலைமை மிக மோச­மாக மாறி­யி­ருப்­பதை காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் யாழ். குடா­நாட்டில் ஆவா குழு உட்­பட பல குழுக்­களின் செயற்­பா­டு­களின் தொடர்பில் அறி­ய­வந்­தி­ருந்­தது.

பொலிஸார் இந்­தக்­குழுக்­களின் உறுப்­பி­னர்கள் பலரை கைது­செய்தும் இருந்­தனர். கடந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்க காலத்தில் குடா­நாடு உட்­பட வட­மா­கா­ணத்தில் தமிழ் மக்­களின் கலா­சார பாரம்­ப­ரி­யங்­களை திட்­ட­மிட்ட வகையில் அழிக்கும் செயற்­பாடுகள் இடம் பெற்று வந்­த­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தி­ருந்­தன.

குடா­நாட்டில் செயற்­பட்டு வந்த குழுக்­களின் பின்­ன­ணியில் படைத்­த­ரப்­பி­னரின் பிர­சன்னம் இருந்­த­தா­கவும் சந்­தே­கங்கள் தெரி­விக்­கப்­பட்டு வந்­தன.

தற்­போது அவ்­வா­றான நிலை இல்­லாத போதிலும், குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான சண்­டைகள், கோஷ்டி மோதல்கள் மற்றும் கலா­சா­ரத்தை சீர­ழிக்கும் வகையில் எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கைகள் என்­ப­வற்றை கட்­டுப்­ப­டுத்த உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு எழுந்­தி­ருக்­கின்­றது.

குடா­நாட்டில் தொடரும் இத்­த­கைய வன்­மு­றைச்­சம்­ப­வங்­க­ளா­னது அங்கு வாழும் மக்கள் மத்­தியில் பெரும் பய பீதியை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று சாதா­ரண பொது­மக்கள் பயந்து வாழ வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

யுத்­தத்­திற்கு முன்னர் குடா­நாட்டில் இவ்­வா­றான கோஷ்டி மோதல்­களும் சண்­டித்­தனக் கலா­சா­ரமும் இருந்தே வந்­தது. ஆனால் தமிழ் இளை­ஞர்கள் ஆயு­த­மேந்­திய போராட்­டத்தை தொடங்­கி­ய­தை­ய­டுத்து இத்­த­கைய சமூ­கங்­க­ளி­டை­யி­லான மோதல்கள், குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான சண்­டித்­த­னங்­க­ளுக்கு முற்­­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

வடக்கு, கிழக்குப் பகு­தி­யினை தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் தம­து­ கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருந்த வேளையில் இத்­த­கைய சம்­ப­வங்கள் இடம் பெறவே இல்லை.

ஆனால் தற்­போ­தைய சூழ்­நிலையில் கோஷ்டி சண்­டை­களும் சண்­டித்­த­னக்­க­லா­சா­ரங்­களும் குடா­நாட்டை ஆக்­கி­ர­மித்­துள்­ளன. தற்­போ­தைய நிலையில் இவ்­வா­றான சண்­டித்­த­னங்­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டு­மானால் குடா­நாடு கெட்டு குட்­டிச்­சு­வ­ரா­வதை தடுக்க முடி­யாது போய்­விடும்.

இத்­த­கைய சம்­ப­வங்­களை தடுத்து பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது பொலி­ஸா­ரி­னதும் சட்­டத்­து­றை­யி­னதும் கட­மை­யா­கவே உள்­ளது. குடா­நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் பொலிஸார் இத்­த­கைய கோஷ்டி மோதல்­களில், வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

குடா­நாட்டில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள், பொது­மக்கள் மீதான தொடர்ச்­சி­யான தாக்­குதல் சம்­ப­வங்­களும் இடம் பெற்று வரு­கின்­றன. இந்தத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் சமூக விரோத கும்­பல்­களின் பின்­னணி காணப்­ப­டு­வ­தாக குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய சம்­ப­வங்­க­ளினால் குடா­நாட்டு மக்­களின் கலா­சா­ரங்கள் திட்­ட­மிட்டு அழிக்­கப்­ப­டு­கின்­றன.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தின் போது குடா­நாட்டில் போதை­வஸ்துப் பாவனை மற்றும் மது­பா­வ­னையும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. பாட­சா­லை­க­ளுக்கு அருகில் போதை­வஸ்து விற்­பனை தொடக்கம் கலா­சா­ரத்தைப் பாதிக்கும் பல்­வேறு விட­யங்கள் இடம்­பெற்­ற­தா­கவும் முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்டு வந்­தன.

குடா­நாட்டில் போதை­வஸ்­துப்­பா­வனை அதி­க­ரிக்­கப்­பட்ட போதிலும், அதன் விநி­யோ­கத்தை தடுப்­பதில் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்றும் பொது அமைப்­புக்கள் குற்றம் சுமத்திவந்தன.

திட்டமிட்ட வகையில் வடக்கில் தமிழ் இளைஞர், யுவதிகளின் உணர்வுகளை குன்றச்செய்து அவர்களை போதைவஸ்துக்கும், மதுபாவனைக்கும் அடிமைகளாக்கும் வகையில் அதற்கான சூழல் ஏற்படுத்தப்படுகின்றதோ என்ற சந்தேகமும் அன்றைய காலப்பகுதியில் எழுந்திருந்தது.

இந்த நிலை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. குடாநாட்டில் போதைவஸ்துப் பாவனை அதிகரிக்கப்பட்டமையும் அங்கு வன்முறை கலாசாரம் கட்ட விழ்த்துவிடப்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கின்றது.

எனவே எதிர்காலத்தில் யாழ். குடாநாட்டில் போதைவஸ்துப் பாவனைகளை கட்டுப்படுத்துவதற்கும் கோஷ்டிமோதல்கள், குழுக்களுக்கிடையிலான வன்முறைகள், சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் என்பவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

இதன் மூலமே சிறந்த சமூக கட்டமைப்பை குடாநாட்டில் கட்டி யெழுப்ப முடியும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.