தடைகளைத் தாண்டி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி- இரத்தத்தில் தோய்ந்த மண் கண்ணீரால் நனைந்தது 6வது ஆண்டு நினைவு தினம்!!!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இடம்பெற்ற 6வது ஆண்டு நினைவு தினம் இன்று, இறுதிப்போர் இடம்பெற்ற பிரதேசமான முள்ளிவாய்க்காலில் தமிழ் சிவில் சமுகம்,மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது. இன்று முற்பகல் 10.30 மணிக்கு பிரதான நினைவுச் சுடரை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஈகைச் சுடர்கள் அரசியல் பிரதிநிதிகளாலும், சிவில் அமைப்பு பிரதிநிதிகளாலும் ஏற்றி வைக்கப்பட்டன.

 தொடர்ந்து தமது உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகள் சுடங்களை கண்ணீர்மல்ல ஏற்றினர். கொடுந்துயரை அனுபதித்த உணர்வோடும், உறவுகளின் இழப்பினால் ஏற்பட்ட கனத்தோடும் கூடிய மக்களது கண்ணீர் வெள்ளத்தில் முள்ளிவாய்க்கால் இன்று சோகமாகியது.