யாழ்/புங்குடுதீவைச் சேர்ந்த,மாணவி சிவலோகநாதன் வித்தியா அவர்கள் 13.05.2015அகால மரணமானார்-விபரங்கள் இணைப்பு!
நீண்ட நேரத்
தேடுதலின் பின் வியாழன் காலை பாழடைந்த வீடொன்றிலிருந்து மாணவியின் சடலத்தினை
மீண்டனர்.
தீவகத்தை
உலுக்கிய இச்சம்பவத்தைக் கண்டித்தும் பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரியும் தீவக வலய
பாடசாலை மாணவர்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தப்
ஆர்ப்பாட்டத்தின் போது எவரும் பயணம் செய்ய முடியாதவாறு வெற்று பரல்களைப் வீதியில்
போட்டு அமர்ந்திருந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த
போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், விந்தன் கனகரட்ணம், தீவக வலய கல்விப்
பணிப்பாளர் குயின்றஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இப்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ‘எமக்கு நீதி தாருங்கள், எம்மை வாழவிடுங்கள்
சமூகமே, எங்களை பாதுகாத்துகொள்”, ‘ பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பை தாருங்கள் கொலை
செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் ” போன்ற வாசகம்
பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்திப் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
கொலை
செய்யப்பட்ட பெண்ணிற்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்ற விடயங்கள் அடங்கிய
மகஜர் ஒன்றை புங்குடுதீவு மாகாவித்தியாலய அதிபர் எஸ்.கணேஸ்வரன் பொலிஸாரிடமும்
கையளித்தார்.
இப்படுகொலைச் சம்பவத்தினைக் கேள்விப்பட்ட-புலம்பெயர் நாடுகளில் வாழும் தீவக மக்கள்
ஆவேசத்துடன் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.உண்மையான குற்றவாளிகளை
கண்டு பிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும்-மாணவர்களின் மீது மறுபடியும்
இப்படியான கொடுமைகள் நடக்காதிருக்க-தூக்குத் தண்டனையே சரியான தீர்ப்பாக இருக்க
வேண்டும் என்று ஆவேசத்துடன் பேசி வருகின்றனர்.
நன்றி: அல்லையூர் இணையம்