இந்த இனிய நாளில் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்! 04ஆம் ஆண்டினை கடந்து சிகரத்தை தொடுகிறோம்!!!(15)
யாழ்ப்பாணம்(LK): உங்கள் அபிமான தமிழ் இணையமான யாழ்ப்பாணத்திற்கு(Yazhpanam) இன்று (15.04.2015) நான்கு ஆண்டுகளை பூர்த்தி செய்து 5வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
இலங்கையில் தமிழ் செய்தி இணைய தளம் ஒன்றை ஆரம்பித்து, தமிழர் பிரதேசங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் மட்டுமல்லாது உலகில் இடம்பெறும் பல முக்கிய விடயங்களையும் உடனுக்குடன் எமது வாசகர்களுக்கு வழங்குவதில் எமது இணையம் சிறந்து விளங்கிறது.
யாழ்ப்பாணம்(yazhpanam) இணைய தளத்தின் நான்கு ஆண்டு கால வெற்றிப் பயணத்தில் இணைந்திருந்த எமது அன்பான வாசகர்களுக்கும் மற்றும் ஊடக நண்பர்கள், ஏனைய பத்திரிகை நாளிதழ்கள் நிறுவனத்தினர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது இந்த வெற்றிப்பாதை மேலும் தொடர எமது வாசகர்கள், ஊடக நண்பர்கள், தினசரி பத்திரிகை ஆசிரியர்களுக்கும் எம்மோடு தொடர்ந்து பயணிப்பார்கள் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
எதிர்வரும் காலங்களில் இணையதள வரலாற்றில் பல புதிய அம்சங்களை புகுத்தி வாசகர்களை மேலும் அறிவூட்ட, தெளிவூட்ட நாம் தயாராக உள்ளோம்.
என்றும் உண்மைக்கு தெளிவுக்கும் முதலிடம்!