வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் பயங்கரவாத தடுப்புப்பிரிவின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர்
கிருஸ்ணபிள்ளை தேவராசா அவர்களை, கொழும்பு -01 இல் புதிய அரசாங்க அதிபர்
கட்டடத்தில் இயங்கிவரும் பயங்கரவாத தடுப்புப்பிரிவின் (TID) 02ம் மாடிக்கு,
30.03.2015 அன்று காலை 10.00 மணிக்கு விசாரணைக்காக வருமாறு தகவல்
கொடுக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி பொலிஸ் நிலையம் ஊடாகவே குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா
வடக்கு நெடுங்கேணி மத்தியில் அமைந்துள்ள கிருஸ்ணபிள்ளை தேவராசா அவர்களின்
பத்திரிகை விற்பனை நிலையத்துக்கு இன்று (26.03.2015) காலை 9.00 மணிக்கு
சென்ற நெடுங்கேணி பொலிஸார் இந்த அறிவிப்பு கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு
சென்றுள்ளனர்.
கடந்த
வருடம் 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக
ஜெயக்குமாரியினதும், ஏனைய அரசியல் கைதிகளினதும் விடுதலையை
வலியுறுத்தியும், சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை
கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு
நடத்தவிருந்த நிலையில், வவுனியா
மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது
(08.10.2014) அன்று இரவு நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக
வைத்து கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமையும்,
சிறீலங்காவின்
ஏழாவது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் 2015 ஜனவரி எட்டு அன்று
நடைபெறவிருந்த நிலையில், அத்தேர்தலில் மூன்றாவது முறையாகவும் மகிந்த
ராஜபக்ஸவை ஜனாதிபதியாகி விடவேண்டும் எனும் முனைப்பில்,
வவுனியா
மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா அவர்களை அணுகிய மகிந்த
ராஜபக்ஸ அரசு சார்பு முகவர்கள், மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு மக்களை
வாக்களிக்குமாறு வலியுறுத்தி வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் சார்பாக ஊடக
அறிக்கை (Press Release Statement) வெளியிடுமாறும், அவ்வாறு செய்யும்
பட்சத்தில்,
Ben’s luxury car உம், ஐம்பது இலட்சம் ரூபாய் பணமும் தருவதாக குறித்த முகவர்கள் பேரம் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.