கிழக்கு மாகாண சபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஆட்சியமைப்பதற்காக சத்தியக்கடதாசியின் மூலமாக தாங்கள் வழங்கிய ஆதரவை, ஆறு
உறுப்பினர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மு.கா
ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர்
சத்தியக்கடதாசியின் ஊடாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்தே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நசீர் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.
(இந்த லட்சணத்தில் இவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்
மதியுரைஞர்-பிரம்மஞானி ‘தேசத்தின்குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களை
கடுமையாக விமர்சித்துமிருந்தார்.)
ஆறு
உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கின்ற சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தன்னிச்சையாக செயற்படுவதாக கூறி, ஏனைய இரண்டு கட்சிகளைச்சேர்ந்த ஆறு
உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை இன்று திங்கட்கிழமை வாபஸ்
பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் குறித்த அறுவர்
சார்பாக, இன்று மதியம் பிள்ளையான் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தன்னுடன்
சேர்ந்து ஏழுபேர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில்
ஆட்சியமைக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக சம்பந்தனிடம்
தெரிவித்துள்ளார்.
இதற்கு சம்பந்தன்,