இனி சாகும் வரை உண்ணா விரதம் இருப்போம்- எமக்கு தீர்வு கூறாவிட்டால்!!!

கிளிநொச்சியில் காணாமல் போனோரின் உறவுகள் தெரிவிப்பு:-


















கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இன்று காணாமல் போன உறவுகளும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் உறவுகளும் இன்று முன்னெடுத்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மாலை 2 மணியளவில் முடிவுக்கு வந்தது. பெருமளவான மக்கள் இங்கு வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு சென்ற கிறிஸ்தவ மதகுரு. துரைரட்ணம் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் மதகுரு உள்ளிட்டோர் ; உண்ணா விரதம் இருந்த உறவுகளுக்கு பழச்சாறு வழங்கி உண்ணா விரதத்தை முடித்துவைத்தனர். அங்கு கருத்துத் தெரிவித்து மக்கள் தம் போராட்டம் இனியும் தொடருமெனவும் பல ஆண்டுகளாக கண்ணீரோடு உறவுகளை தேடி அலையும் எங்களுக்கு சரியான தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும் அப்படி வழங்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில்; குதிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதே வேளை தமது சுயநல அரசியல் நோக்கங்களுக்காக கொடும்பாவி எரிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களுக்கு தங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்த கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சர்வதேசத்தையும் ஐ.நா.சபையையுமே தாம் நம்புவதாகவும் உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லையெனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.








                                              செய்தி: குளோபல் தமிழ் செய்தி