கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாதிரி கவுட்டுக்கொட்டவில்லை! - கூறுகிறார் அன்ரனி ஜெகநாதன் (Audio)
நேற்றைய
தினம் (01.03.2015) வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய
செயற்குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வெளியேறிய போது,
ஊடகவியலாளர்கள் பேட்டி காண முயன்றனர். அப்போது தான் சிங்கக்கொடி ஏற்றிய
படத்தினை இணையங்கள் பிரசுரித்ததாக கூறி ஊடகவியலாளர்களுடன்
(கு)தர்க்கப்பட்டார் வடமாகாணசபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன்.
அவர் குதர்க்கத்தனமாக தெரிவித்த கருத்துகள்!
நாங்கள்
என்றும் உண்மையை பேசுவோம். நான் எனது மகனை மண்ணுக்காக விட்டவன். நான்
கடைசி வரை இந்த மண்ணில இருந்தவன். என்ர மகன் மாவீரன். நான் சுமந்திரன் ஆள்
இல்லை. அவரது ஆளும் இல்லை. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக
கொடும்பாவி எரித்தது பிழை. அதை டெனீஸ்வரன் மாகாணசபையில் கதைத்த போது
அனந்தி தேவையற்ற வார்த்தைகளை பிரயோகித்தவர். அவர் கூட்டமைப்புக்காக
ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறினார். அதனால் தான் அவரை அடக்குவதற்கு புலிகள்
கடத்திய பிள்ளைகளுக்கு யாருடைய கொடும்பாவியை எரிப்பது என்று சொன்னேன். அது
எனது உளப்பூர்வமான கருத்து இல்லை.
We are Sri Lankan: சிங்கக்கொடி ஏற்றுவதில் என்ன தவறிருக்கிறது?
என்னுடைய சிங்கக்கொடி ஏற்றுற படத்தை போடுகிறார்கள். சிங்க கொடி ஏற்றுவதில் என்ன தவறு இருக்கிறது. (We are Sri Lankan) வீ ஆ சிறிலங்கன்! இலங்கை எங்களுடைய நாடு தானே. சிங்கக்கொடி ஏற்றுவதில் தவறில்லை.
நான்
அன்று மகாணசபையில் கதைத்தில் என்ன தவறு இருக்கிறது. எழிலன், அனந்தி எத்தனை
பேரை பிடித்தார்கள். அது எங்களுக்கு தெரியும். ஊடகங்கள் காசு வாங்கிவிட்டு
செயற்படுகின்றது. நாங்கள் நேர்மையான அரசியல்வாதிகள்.
நான்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் சும்மா வீட்டை இருந்தே
வெல்லுவன். நான் வசதியானவன். நாங்கள் எங்கட காலில் தான் வாழுறம்.
வெளிநாட்டில உள்ளவர்களின் தயவில் வாழவில்லை.
நாங்கள்
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு கேட்கிறோம். ஒற்றையாட்சி முறைக்குள் தான் பேசி
வருகிறோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாதிரி கவுட்டுக்கொட்டவில்லை.
காணாமல் போனவர்களின் பிரச்சனை வேற. ஆனா அவர்களை வைத்து பிழைப்பு
நடத்துகிறார்கள். அனந்தியின் போராட்டம் காணாமல் போனவர்களின் மக்களுக்கான
போராட்டம் இல்லை.
நாங்கள் எதுக்கும்
பயப்பிடப்போவதில்லை. சில வப்புகள் என்னைப்பற்றி தேவையில்லாமல்
போடுகிறார்கள். முல்லைத்தீவில் உள்ள ரவிகரன் சும்மா ஏதோ பூச்சியை
அடிச்சிட்டு போட்டால் அதை போடுகிறார்கள். ஊடகங்கள் காசு வாங்கிவிட்டு
செயற்படுகின்றன. நாங்கள் உண்மை பேசினா போடுகிறார்கள் இல்லை எனக்கூறினார்.
அப்போது ஊடகவியலாளர் தொடர்ந்தும் கேள்விகளை கேட்டபோது, அவ்விடத்தில்
இருந்து உடனடியாகவே தலைமறைவாகிவிட்டார்.