(உ+ம் நிலற்ப்படம்) |
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
4 வயது சிறுமி ஃபெப்ரினா உட்பட 157 தமிழர்கள் தஞ்சம் கோரி வந்த படகை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒரு மாதம் தடுத்து வைத்தனர். அவர்களை இலங்கைக்கோ அல்லது இந்தியாவுக்கு திருப்ப அனுப்பாமல் தாமதித்து வந்தது அவுஸ்திரேலிய அரசு.
அதன் பின்னரே நவுறு முகாமுக்கு அவர்கள் அனைவரையும் அவுஸ்திரேலிய அரசு அனுப்பியது. இவர்களில் 37 பேர் சிறுவர்கள். இந்த சிறுவர்கள் போதுமான உணவு உள்ளிட்ட கவனிப்பு இல்லாமல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக முகாமில் இருக்கும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சிறுமி ஃபெப்ரினாவின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு 15% அளவுக்கு எடை குறைந்துள்ளடு. அவரது உடல்நிலை அடிக்கடி மிக மோசமாக பாதிக்கப்பட்டு பல நேரங்களில் தனிமையாகத்தான் வைக்கப்பட்டிருக்கிற நிலைமையில் இருக்கிறார். இதே நிலைமையில் பல சிறுவர்களும் இருக்கின்றனர்.
இப்படி நவுறு முகாமில் இருக்கும் ஒவ்வொரு சிறாரது நிலைமையும் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. இந்த மோசமான நிலைமைக்கு அவுஸ்திரேலியா அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் அனைவரையும் அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டு வந்து உடனடியாக மறுவாழ்வுப் பணிகளை இத்தனை தாமதத்துக்கு பின்னராவது வழங்க வேண்டும்.
இது ஒரு மனிதாபிமான பிரச்சனை என்பதை அவுஸ்திரேலிய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.