பிரித்தானியாவில் "யாழ் வுட்" என்ற இரகசிய தடுப்பு முகாம் - சனல் 4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது!!!

லண்டனில் "யாழ் வுட்" என்னும் ரகசிய தடுப்பு முகாம் ஒன்று இயங்கிவருவதாக சனல் 4 தொலைக்காட்சி ஆவணம் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுவரை காலமும் எவரும் கமராவோடு அங்கே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் முதன் முறையாக ரகசிய கமராக்களோடு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் உள்ளே நுளைந்து நடக்கும் கொடுமைகளை படம்பிடித்துள்ளார்கள்.
"யாழ் வுட்" தடுப்பு முகாம் என்பது தமிழர்கள் தடுப்பு முகாம் அல்ல.  ஆனால்  இங்கே  ஈழத் தமிழ் பெண்களையும் பிரித்தானிய இமிகிரேஷன் அதிகாரிகள். தடுத்து வைத்திருக்கிறார்கள்.


அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு , அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பவென தடுத்துவைக்கப்படும் நபர்களை இந்த முகாமிற்கே அனுப்புகிறார்கள்.
குறித்த முகாமில் சுமார் 400 பேர் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமானோர் பெண்கள் ஆவர். இவர்களில் 6 பேர் கர்பினிப் பெண்கள் என்பது முக்கிய தகவல்.
இங்கே பலர் எண்ணில் அடங்காத அளவு தற்கொலை முயற்சிகளுக்கு முயன்றுள்ளார்கள்.
இதேவேளை, இங்கே காவலாளிகளாக பணிபுரிபவர்கள், பெண்கள் குளிக்கும்வேளை அவர்கள் அறைக்குச் சென்று, குளிப்பததை பார்கிறார்கள். ஆபிரிக்க பெண்களைப் பார்த்து அவர்கள் மிருகம்போன்றவர்கள் என்று தமக்கு தாமே பேசும் காட்சிகள் மற்றும் ஒலி நாடாக்களையும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

                                                                                                               தமிழாக்கம்
                                                                                                   நன்றி: குளோபல் தமிழ் செய்தி