ஆமிப்பிடித்து காணாமல் போனதற்கு கொடும்பாவி எரிக்கிறீங்களே! புலிகள் பிடித்து சென்றதற்கு யாருடைய கொடும்பாவியை எரிக்க போகிறீர்கள்? புதிய நரி அன்ரனி ஜெகநாதன் தமிழ் மக்களிடம் கேள்வி கேட்கிறார்?
வடமாகாணசபையின் (25.02.2015) அமர்வில் மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை
அமைச்சர் பா.டெனீஸ்வரன் அண்மையில் யாழில் சுமந்திரனின் கொடும்பாவி
எரியூட்டப்பட்டமை தொடர்பில் விவாதமொன்றை ஆரம்பித்திருந்தார்.
சுமந்திரனுக்கு ஆதரவாகப்பேசிய இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், பிரதி அவைத்தலைவருமாகிய
அன்ரனி ஜெகநாதன், காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களுடன் தொடர்புடைய
வடமாகாணசபை உறுப்பினரொருவரே இதன் பின்னணியிலிருப்பதாக அனந்தியை சாடினார்.
இதன்போது
குறுக்கிட்ட அனந்தி சசிதரன், காணாமல் போனவர்களை தேடி அலையும் அவர்களது
குடும்பங்களிற்கே அதன் வலி தெரியும் என்றும், ஐ.நா விசாரணை அறிக்கை மூலம்
நல்லதொரு தீர்வு தமக்கு கிடைக்குமென்று ஆட்கடத்தல் சம்பவங்களால்
பாதிக்கப்பட்டவர்கள் காத்திருந்தனர். ஆனால் இப்போது சிலர் உள்ளக விசாரணை
பற்றி பேசுகின்றார்கள் என்றும்,
ஏற்கனவே
கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கும், அதே போன்று காணாமல்
போனவர்களினை தேடிக்கண்டறியும் குழு விசாரணைகளிற்கும் என்ன நடந்தது? என்று
அனைவருக்கும் தெரியும் என்றும், நீதி மறுக்கப்பட்டநிலையில்
பாதிக்கப்பட்டவர்கள் ஆசுவாசப்பட்டு கொடும்பாவியை எரித்திருக்க கூடும்
என்றும் தெரிவித்தார்.
கவனயீர்ப்பு
போராட்டத்தை நடத்தியிருந்த காணாமல் போகச்செய்யப்பட்டவர்களது குடும்பங்கள்
ஜெனீவாவிற்கு எடுத்துச்செல்லுமாறு மகஜரொன்றை தரப்போவதாக அறிவித்திருந்த
நிலையில் அதனை பெற்றுக்கொள்ளவே தான் அங்கு சென்றிருந்ததாகவும் அனந்தி
கூறினார்.
அனந்திக்கு பதிலளித்துப்பேசிய
அன்ரனி ஜெகநாதன், கூட்டமைப்பில் உள்ளவர்களுள் மண்டைவளம் மிக்கவர்
சுமந்திரனே என்றும், “ஆமிப்பிடித்து காணாமல் போனதற்கு சுமந்திரனின்
கொடும்பாவியை எரிக்கிறீங்களே! புலிகள் பிடித்து சென்றதற்கு யாருடைய
கொடும்பாவியை எரிக்கப்போகிறீர்கள்?” என்றும் மறுகேள்வி எழுப்பினார்.
அன்ரனி
ஜெகநாதனின் விசமப்பேச்சிற்கு குறுக்கிட்டு விளக்கமளிக்க மற்றுமொரு
உறுப்பினரான க.சர்வேஸ்வரன் முற்பட்டபோதும், அதற்கு இலங்கை
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், அவைத்தலைவருமாகிய
சீ.வி.கே.சிவஞானம் அனுமதித்திருக்கவில்லை.
Puli Urumudhu
செய்தியாளர்,
-கவரிமான்-