வடமாகாணசபையில் இராணுவத்துக்கு அஞ்சலி செலுத்திய அன்ரனி ஜெகநாதன்!!!

இன்று (22.05.2014) நடைபெற்ற வடமாகாணசபை அமர்வில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக அஞ்சலி உரையாற்ற, சபை உறுப்பினர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நேரம் ஒதுக்கப்பட்ட காரணத்தினால் சில உறுப்பினர்கள் அஞ்சலி உரையாற்றினர்.
பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தனது அஞ்சலியுரையில், இறுதி யுத்தத்தில் இறந்த பொதுமக்கள் போராளிகளுக்கு என்று மட்டுமில்லாமல், யுத்தத்தில் கொல்லப்பட்ட இராணுவத்தினரையும் இச்சமயத்தில் தான் நினைவு கூருவதாக குறிப்பிட்டதோடு,
ஓரக்கண்ணால் ரவிகரனை சாடை காட்டி, சிலர் பேப்பரில நியூஸ் போடுறதுக்காக நிகழ்ச்சி நடத்துகினம். ஆனால் நாங்க அப்பிடியில்லை. எவ்வளவோ செய்யிறம். எங்களப்பத்திய செய்தி வரவே வராது என்று ஊடகவியலாளர்களுக்கும் ஒரு போடு போட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய திர்க்கட்சி தலைவர் தவராசா, யுத்தத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்களும் மரணித்திருப்பதாகவும் அவர்களும் நினைவு கூரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 

   




                                                                                                            சிறப்பு செய்தியாளர்,
                                                                                                                  -கவரிமான்-