கடந்த 28.03.2005அன்று ஊடகவியலாளர் சிவராமை
இராணுவ புலனாய்வு பிரிவினருடன் சேர்ந்து கடத்தி சென்று படுகொலை செய்த
புளொட் பீற்றர் என்ற கொலைகாரன் விடுதலை செய்யப்பட்டுள்ளான்.
இவனிடமிருந்து சிவராம் பாவித்த தொலைபேசி
மற்றும் சிம் காட் என்பன கைப்பற்றப்பட்ட போதிலும் சிறிலங்கா புலனாய்வு
பிரிவினரின் ஆலோசனைப்படி இவன் மீது முறையான குற்றப்பத்திரிகையை சட்டமா
அதிபர் திணைக்களம் தாக்கல் செய்யாததாலும் சிவராம் கொலை வழக்கின் ஆவணங்களை
அரசாங்கம் எரித்ததன் காரணமாகவும் இக்கொலையின் முக்கிய நபரான ஸ்ரீஸ்கந்தராசா
என்ற புளொட் பீற்றர் என்பவன் விடுதலை செய்யப்பட்டுள்ளான்.
இந்த புளொட் பீற்றர் என்பவனே கொழும்பில்
பலரை கடத்தி கப்பம் பெற்றதுடன் பலரை கடத்தி கொலை செய்தான் என்றும்
பொதுமக்களால் குற்றம் சாட்டுள்ளான்.
தமிழ் மக்களின் பல கொலைகளுக்கு காரணமான
புளொட் பீற்றர் என்பவன் சித்தார்த்தனுடன் தற்போதும் உள்ளான் என்றும் புளொட்
இயக்கத்தின் கொலை கொள்ளை கடத்தல் கப்பம் பெற்றல் போன்ற குற்றங்களுக்கு
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பதில் சொல்ல வேண்டும் என்றும் தமிழ் மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊடகவியலாளர்களை பொதுமக்களை படுகொலை செய்ய
குற்றங்களில் புளொட் தலைவன் சித்தார்த்தன் உட்பட அந்த இயக்கத்தவர்களை கைது
செய்ய வேண்டும் என்றும் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்
தெரிவித்துள்ளார்.