வருமான வரி செலுத்தாத தங்கசாமியார்- ஒரு மணி நேரத்தில் 48இலட்சம் செலுத்தி சிறைமீண்டார்!!!

தங்கச் சாமியார் என்று அழைக்கப்படும் கண்டி கால்தென்ன காமி ஆணந்த என்ற பிரபல சாமியார் வருமான வரி கட்டவில்லை என்ற குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் ஒரு மணி நேரத்தில் அபராதமாக 48 இலட்சம் ரூபாவைச் செலுத்தி சிறையிலிருந்து மீண்டுள்ளார்.
கண்டி அம்பிட்டிய கால்தென்ன பத்திரகாளியம்மன் தேவஸ்தானத்தில் பிரபல சாமியாராக இருக்கும் இவர் காளி தேவதை அருள் கொண்டு அற்புதங்கள் மேற்கொள்பவராக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இதன் காரணமான இவரது ஆலயத்திற்குச் சென்று அனேகர் ( மூடநம்பிக்கை கொண்ட பைத்தியங்கள்) தங்கமாக தமது காணிக்கைகளைச் செலுத்துவர் இவரது உடலில் சுமார் 20 கிலோவிற்கு மேற்பட்ட எடைகொண்ட தங்கம் அணிந்து கொண்டு இவர் சர்வசாதாரணமாக வலம் வருவார்.
 
இவரில் மயங்கிய சில பெண்கள் தங்கள் கழுத்திலிருந்த தங்க தாலியை கூட கழற்றி இவருக்கு போட்ட சம்பவங்களும் உண்டு.
இவருக்கு வருடாந்தம் கோடிக்கணக்கான வருமானம் வருகின்ற போதிலும் பல வருடங்களாக இவர் வருமான வரிசெலுத்தவில்லை எனக்குற்றம்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கில் கண்டி நீதவான் சிரிநீத் விஜேசேக்கர தங்கச்சாமியார் (ரூபா 48,86,840.00) அபராதத்தை விதித்ததுடன் அபராதத் தொகையை செலுத்தும் வரை சிறையிலடைக்குமாறும் உத்தரவிட்டார்
எனினும் சாமியார் சுமார் ஒரு மணிநேரத்தில் அப்பணம் முழுவதும் செலுத்தி விடுதலையாகியுள்ளார்.