மன்னாரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 3 கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் அமைதிப் போராட்டம்!!!குளோபல் தமிழ் செய்தி
(பதிவு:குளோபல் தமிழ் செய்தி) |
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமற்போன,கடத்தப்பட்டவர்களை கண்டறியக் கோரியும், திருக்கேதீஸ்வர மனித புதை குழி தொடர்பான விசாரணை கோரியும் குறித்த அமைதிப்போராட்டம் இடம் பெற்றது.
மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று (26) திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில்
அமைதி ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலக வீதியூடாக மன்னார் பஸார்
பகுதியை சென்றடைந்தது.
இதன் போது கலந்து கொண்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் முகத்தில் கருப்பு துணி கட்டி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன் போது கலந்து கொண்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் முகத்தில் கருப்பு துணி கட்டி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குறித்த அமைதிப் போராட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர்
அந்தோனி சகாயம்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார் உற்பட
பலர்கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.