நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்ற இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அத்தியாவசியப்
பொருள்களின் விலைப் பட்டியல்
அரச ஊழியர்களின் சம்பளம் பெப்பரவரியில் 5,000 ரூபாவால்
அதிகரிக்கப்படும். ஜூன் மாதம் முதல் இன்னும் 5,000 ரூபாய் அதிகரிக்கப்படும்.
கடந்த அரசாங்கம் பெற்ற கடனை இந்த அரசாங்கம்
செலுத்தவேண்டியிருக்கிறது.
தனியார் துறையின் மாதாந்த சம்பளத்தை 2,500 ரூபாவால் அதிகரிக்க கவனம்
செலுத்துமாறு கோரிக்கை.
நூறுநாட்கள் வேலைத்திட்டத்துக்கு தேவையான நிதியை திரட்ட
வேண்டியுள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் அரசுக்கு 5,000 மில்லியன் அமெரிக்க டொலர்
நட்டம்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
ஓய்வூதியக் கொடுப்பனவு 1,000 ரூபாவால் அதிகரிக்கப்படும்.
சமுர்த்திக் கொடுப்பனவு 100 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை
அதிகரிக்கப்படும்.
புதிதாக பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களில் தாய்மார்களுக்கு 2
வருடங்கள் வரை கொடுப்பனவு.
விவசாயிகள், வர்த்தக வங்கிகளுக்கு வழங்கவேண்டிய கடனில் 50 சதவீதம்
தள்ளுபடி.
தேயிலை, இறப்பருக்கு நிவாரண விலை.
சிறிய ரக உழவு இயந்திரங்கள் குறைந்த விலையில்
பெற்றுக்கொடுக்கப்படும்.
உரமானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
தூய பால் லீற்றரொன்றுக்கு 70 ரூபாய் நிவாரண விலை.
கொழும்பு நகரில் மீண்டும் குடியேறும் மக்களுக்கு நிவாரணம்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கும் ஒதுக்கப்படும் நிதி 5
மில்லியனிலிருந்து 10 மில்லியனாக அதிகரிக்கப்படும்.
தயட்ட கிருலயில் ஊழல் மோசடி, அதை நிறுத்துவதற்கு யோசனை.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.
சிறுநீரக நோயாளிகர்களின் கொடுப்பனவுக்காக 2,000 மில்லியன்
ஒதுக்கப்படும்.
சுகாதாரத்துறைக்கான செலவு 3 சதவீதத்தால் அதிகரிக்கும்.
வெளி நோயாளர் பிரிவு 24 மணிநேரமும் திறந்திருக்கும்.
மண்ணெண்ணெய் விலை லீற்றரொன்றுக்கு 6 ரூபாவால் குறைப்பு. தற்போதைய
விலை 59 ரூபாய்.
அத்தியாவசியப் பொருட்கள்
13இன் விலைகள் குறைக்கப்படும்.
சீனியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு
400 கிலோகிராம் பால்மாவின் விலை 61 ரூபாவால் குறைப்பு
கோதுமை மாவின் விலை ரூ.12.50 குறைப்பு
நெத்தலி கருவாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்படும்.
இதன்மூலம் 15 ரூபாவால் குறைக்கப்படும்.
பாசிப்பயறு 1கிலோவின் விலை 30 ரூபாவால் குறைப்பு.
டின்மீன் விலை 60 ரூபாவால் குறைப்பு
கொத்தமல்லிக்கான விஷேட பண்ட வரி 30 ரூபாவால் குறையும்.
உழுந்து கிலோவொன்று 60 ரூபாவால் குறையும்.
சமையல் எரிவாயுவின் விலை 300ரூபாவால் குறைப்பு.
மாசி கிலோவொன்று 200ரூபாவால் குறைப்பு.
அரசவங்கிகளில் ரூ.2லட்சத்துக்குமேல் நகை
அடகுவைத்திருப்பவர்களுக்கான வரி தள்ளுபடி.
அதிசொகுசுவாய்ந்த வீடுகளுக்கு வருடாந்தம் ஒரு மில்லியன் ரூபாய்
இல்ல வரி.
இலங்கை பிரஜாவுரிமையை கைவிட்டு செல்கின்றவர்கள் கொண்டுசெல்லும்
பணத்துக்கு 20 சதவீதம் வரி.
சொகுசு வீடுகளுக்கு ஒருதடவைமட்டும் வரி அறவிடப்படும்.
2,000 மில்லியன் ரூபாவுக்கு கூடுதலாக வருமானம் பெறுவோருக்கு 20
சதவீதம் வரி.
உற்பத்தியின் போது செலுத்தப்படும் ஆகக்குறைந்த வரிமட்டம் 750,000
வரை உயர்த்தப்படும்.
1,000 இயந்திரவலுவுக்கு குறைவான வாகனத்துக்கான வரி 15 சதவீதம்
குறைப்பு.
சீமெந்து மற்றும் உருக்குக்கான தீர்வை குறைப்பு. இதன் மூலம்
சீமெந்து மூடையொன்றின் விலை 90 ரூபாவால் குறையுமென எதிர்பார்ப்பு.
மோட்டார் வாகனங்களை சேகரிக்கும் நிறுவனங்கள் செலுத்தாத வரிகளை
மீளப்பெற யோசனை. இதன் மூலம் 12,000 மில்லியன் வருமானம் எதிர்பார்ப்பு.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சேகரிக்கும்
நிறுவனங்களிடமிருந்து பெறவேண்டிய வரிக்கு தள்ளுபடி.
எதனோல் இறக்குமதியை கட்டுப்படுத்த சுங்க பிரிவுகளில் ஸ்கேன்
இயந்திரம் பொருத்த நடவடிக்கை.
5,000 ரூபாவாக இருந்த திருமண மற்றும் பதிவுக்கட்டணம் 1,000 ரூபாவாக
குறைப்பு.
25 சதவீதமாக இருந்த அலைபேசிகளுக்கான மீள்நிரப்பு அட்டைக்கான வரி
குறைப்பு.
விளையாட்டு நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு
1,000 மில்லியன் ரூபாய் வரி.
மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு விலைமனுக்கோரல். ஒருவருக்கு
3 அனுமதிப்பத்திரமே வழங்கப்படும். மதுபான அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணம் 2
மடங்காக அதிகரிக்கப்படும்.
அங்கவீனமடைந்த இராணுவவீரர்களுக்கு, ஆகக்குறைந்தது 5 இலட்ச ரூபாய்
கடன்.
மஹாபொல புலமைப்பரிசில் 5,000 ரூபாவால் அதிகரிப்பு.
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு 200 ரூபாய் கொடுப்பனவு.
ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களின் நட்டத்தை நாட்டால்
தாங்க முடியவில்லை. இவ்விரு நிறுவனங்களால் ஏற்பட்ட நட்டம் 100 பில்லியனை
தாண்டிவிட்டது. ஆகையால் இவ்விரு நிறுவனங்களையும் இணைக்கின்றோம்.
சிரேஷ்ட பிரஜைகளுக்கான பஸ் கட்டணம் 50 சதவீதத்தால் குறைப்பு.
மீனவர்களுக்கு ஆயுட் காப்புறுதி.
முற்பணமின்றி வங்கிக்கணக்கு ஆரம்பிக்க நடவடிக்கை.
அரச நிறுவனங்கள் அரசசெலவில் விளம்பரம் செய்தல் நிறுத்தப்படவேண்டும்.