வாகரைப் பிரதேச இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை பார்வையிட்டு உதவிகளை வழங்கினார் யோகேஸ்வரன் MP!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன்; இந்தியாவில் இருந்து வருகை தந்து வாகரைப் பிரதேசத்தில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை திங்கட்கிழமை பார்வையிட்டு உதவிகளை வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர் தமது சபரிமலை யாத்திரை பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவில் இருந்து இலங்கையை வந்தடைந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தரமுயற்சித்த வேளை ஹபரனை வீதி நீரில் மூழ்கியதால் திருமலை ஊடாக ஞாயிற்றுக்கிழமை இரவு வருகை தந்த போது இரவு 2 மணியளவில் வெருகல் கங்கை மாவடிச்சேனை ஊடாக பெருக்கெடுத்தால் இப்பாதையில் 5 அடிக்கு அரை கிலோ மீற்றர் நீர் ஓடியதனால் அப்பாதை வழியாக வந்த இரு லொறிகள் வீதி நடுவில் புதையுண்டதால் செல்ல முடியாத நிலையில் அப்பகுதியில் தடைப்பட்டிருந்தார்.

பின்னர் திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் அப்பகுதி அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் உதவியால் பெரும் சிரமத்துக்கு மத்தியில் வாகரை பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர். இவரது வாகனம் அதன் சாரதி எல்லோரும் தற்போதும் ஈச்சிலம்பற்றையில் தங்கியுள்ளது.

இவர் வாகரைப் பிரதேசத்தில் தற்போதைய பெரும் மழையாலும், குளங்கள் திறந்து விட்டதாலும் பாதிக்கப்பட்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்த மக்களை சென்று பார்வையிட்டதுடன், அவர்களுடன் உரையாற்ற அவர்களுக்கு அவசரமாக தேவைப்பட்ட பால்மா, சீனி, தேயிலை, பனடோல், நுளம்பு திரி, தீப்பெட்டி, மெழுகுவர்;த்தி, மின்குமிழ் உட்பட்ட அவசிய பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தும் முகமாக முகாம் பொறுப்பாளர்களிடம் கையளித்தார்.

இவ்வகையில் கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 212 குடும்பத்தை சேர்ந்த 750 பேரும், புச்சாக்கேணி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டத்தில் 90 குடும்பத்தை சேர்ந்த 267 பேரும், தோணிதாட்டமடுவில் 35 குடும்பத்தை சேர்ந்த 126 பேரும், ஆண்டான்குளத்தில் 70 குடும்பத்தை சேர்ந்த 246 பேரும், கட்டுமுறிவுக்குளத்தில் 143 குடும்பத்தை சேர்ந்த 576 பேரும், பால்ச்சேனை அ.க.பாடசாலையில் 483 குடும்பத்தை சேர்ந்த 1615 பேரும், அம்பந்தனாவெளி வம்மிவட்டவான் பாடசாலையில் 565 குடும்பத்தை சேர்ந்த 1869 பேரும், வாகரை வடக்கு கண்டலடி பாடசாலையில் 105 குடும்பத்தை சேர்ந்த 410 பேரும், கண்டலடியில் 195 குடும்பமும், வாகரை அழகாபுரி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டத்தில் 101 குடும்பத்தை சேர்ந்த 602 பேரும், வாகரை ஊரியன்கட்டு பாடசாலையில் 294 குடும்பத்தை சேர்ந்த 1174 பேரும், தட்டுமுனை அ.த.க.பாடசாலையில் 365 குடும்பத்தை சேர்ந்த 1809 பேரும், பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்தில் 362 குடும்பத்தை சேர்ந்த 793 பேரும், பனிச்சங்கேணி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் 79 குடும்பத்தை சேர்ந்த 314 பேரும், பனிச்சங்கேணி சல்லித்தீவில் 235 குடும்பத்தை சேர்ந்த 685 பேரும், மாங்கேணி 2ம் கட்டை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டத்தில் 56 குடும்பத்தை சேர்ந்த 178 பேரும், மாங்கேணி றோமன் கத்தோலிக்க பாடசாலையில் 254 குடும்பத்தை சேர்ந்த 763 பேரும், மாங்கேணி பாம் கொலணியில் 261 குடும்பத்தை சேர்ந்த 782 பேரும் என அனைவரையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டு சிறு உதவி வழங்கப்பட்டன.

அத்தோடு வட்டவான், இடைத்தங்கல் முகாம், இறாலோடை இடைத்தங்கல் முகாம், காயான்கேணி இடைத்தங்கல் முகாம், மாவடியோடை கிறிஸ்தவ தேவாலய இடைத்தங்கல் முகாம் என்பன மேலதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இடைத்தங்கல் முகாம்களாகும். வாகரைப் பிரதேசத்தில் மாத்திரம் மேற்தரப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வேளை வாழைச்சேனை பிரதேசத்தில் ஐந்து முகாம்களும், கிரான் பிரதேசத்தில் 14 முகாம்களும், செங்கலடி பிரதேசத்தில் 19 முகாம்களும் மற்றும் பட்டிப்பளை, வவுணதீவு, வெல்லாவெளி போன்ற பகுதிகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் தொடர் மழை நீடித்தால் பெருந்தொகையான முகாம்கள் உருவாகும் நிலை உள்ளது.
   நன்றி: BattiNews இணையம்
         (த.லோகதக்சன்)