145 மில்லியனை வெள்ளையடித்த லண்டன் தமிழர்கள் 19 வருடம் சிறை!!!

லண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகள், 145 மில்லியன் பவுன்டுகளை வெள்ளையடித்து இறுதியில் டாக்ஸ் ஆபீசிடம் சிக்கிக்கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் 19 வருட சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார். நடந்தது என்ன ?
லண்டனில் உள்ள பிரபலமான ஆக்ஸ்பேட் வீதியில் மேலும் 2 இடங்களில் பணமாற்று சேவை நிலையத்தை வைத்து நடத்தி வந்துள்ளார் மூத்ததம்பி சிறீஸ்கந்த ராஜா. இவரது மனைவியின் பெயர் திலகேஸ்வரி. இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள பெரும் கிருமினல் குழுக்களிடம் பணத்தை பெற்று அதனை ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு அனுப்புவதும், பின்னர் அதனை மீண்டும் லண்டனுக்கு அனுப்பி அந்த கறுப்பு பணத்தை வெள்ளையடிப்பதில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். லண்டன் மத்திய நகரில் உள்ள  தனை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி , மீண்டும் அதனை லண்டனுக்குள் வங்கி மூலம் கொண்டுவந்துள்ளார்கள்.
இதனால் காசு வெள்ளையடிக்கப்படுகிறது(அதாவது உத்தியோகபூவர் காசாக மாறுகிறது) அல்லவா. இப்படியாக இவர்கள் மொத்தம் 145 மில்லியன் பவுன்டுகளை வெள்ளையடித்து கொடுத்து, அதற்காக பெரும் பணத்தை தமது பங்காகப் பெற்றுள்ளார்கள். என்ன ஒரு விடையம் இவர்கள் டாக்ஸ் ஆபிஸ் மற்றும் வருமான வரித்துறையை இழிவாக எண்ணிவிட்டார்கள். குறித்த தமிழர்களது நிறுவனத்தில் இருந்து பெரும் பணம், ஐரோப்பிய நாடுகள் செல்வதும். பின்னர் அவை மீண்டும் லண்டனுக்குள் வருவதையும் அவதானித்த வருவாய்துறை அதிகாரிகள். மாறுவேடத்தில் இந்த தம்பதிகளை அவதானிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இவர்கள் இருவரும் சகோதரிகளான மார்லின் மற்றும் லூசியா ஆகிய பெண்களை வைத்து, பெரும் பணத்தை ஐரோப்பாவுக்கு கடத்துவதை அதிகாரிகள் எப்படியோ மோப்பம்பிடித்துவிட்டார்கள். அவர்களை பிந்தொடர்ந்த அதிகாரிகள், முதலில் மார்லீனை மடக்கிப் பிடிக்க அவரிடம் பணமாக 90 ஆயிரம் பவுன்சுகள்(90 லட்சம் இந்திய ரூபாய்) இருந்துள்ளது. மேலும் லூசியாவை மடக்கிப் பிடித்தவேளை அவரிடம் மட்டும் 30 ஆயிரம் பவுன்சுகள் இருந்துள்ளது. பின்னர் அனைத்தையும் விசாரித்து அறிந்துகொண்ட அதிகாரிகள், பொலிசாரின் உதவியோடு சென்று சிறீஸ்கந்த ராஜாவையும் மனைவியையும் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்திவிட்டார்கள். இவர்கள் இருவருக்குமாக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி நேற்றைய தினம் தீர்பளித்துள்ளார்.London-Tamil-02 London-Tamil-01 London-Tamil