கடந்த 22.10.2014 அன்று எமது அரியாலை முள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் மரியவதனி (வயது 18) என்பவர் கொடூரமான பாலியல் வல்லுறவுக்கும் உடலியல் உளவியல் ரீதியான வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளதை நீங்களும் அறிவீர்கள்.
இந்த வன்முறையை நிகழ்த்தியவர் முள்ளி வீதி, அரியாலை எனும் .முகவரியைச் சேர்ந்த 27 வயதுடைய சோதிநாதன் யசிந்தன் என்பவராவார். இவர் கடந்த காலங்களிலும் இது போன்ற பல வன்முறைகளை எமது முள்ளி, பூம்புகார் பகுதிகளில் நிகழ்த்தியுள்ள காரணத்தாலும் இவருடன் இணைந்த இவருடைய வன்முறைகளுக்குத் துணை போகும் நண்பர்கள் இன்னமும் சமூகத்தில் நடமாடித் திரிவதாலும் உள்ள அச்சுறுத்தல் காரணமாக நாங்கள் எங்களை அடையாளப்படுத்தாது இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றோம்.
குறித்த நபரால் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள்:
• நாவலடியைச் சேர்ந்த ஒரு 42ற்கும் 47ற்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்மணி (இதற்குப் பிறகு பெண்மணியின் குடும்பம் அந்த முகவரியில் இல்லை),
• இரண்டாவது அண்ணியின் தங்கை,
• யசிந்தனால் மரியவதனிக்கு கூறப்பட்ட இன்னொரு இளம் பெண்,
• இவனது மூத்த அண்ணனின் 19 வயது, 17 வயது, 10 வயது பெண் பிள்ளைகள் கூட இவனால் வௌ;வேறு காலப்பகுதிகளில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதில் 17 வயது பிள்ளை 23.09.2014 அன்றும் 10 வயது பிள்ளை கடந்த ஒரு வருடத்துக்குள்ளும் 19வயது பிள்ளை 03வருடத்திற்குள்ளும் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இவற்றைவிட எமக்கு சரியாக விபரங்கள்
தெரியாத 40வயது, மற்றும் இரண்டு 18வயதுடைய பெண்கள் என மேலும் பலர் பாலியல்
வன்முறைக்குட்படுத்தபட்ட கதைகளும் தெரியவருகின்றன. இவ்விடயங்கள் வதனி
தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் இவ்விடயங்கள்
வெளிவருகின்றது.
இவன் இப்பொழுது மனைவியாகச் சேர்ந்து
வாழும் பெண்ணும் அவனுடைய அண்ணனின் மனைவி ஆவார். அண்ணன் 2005ம் ஆண்டு
காணாமல் போன பின்னர் அந்தப் பெண்ணை இவன் தனது மனைவி ஆக்கிக் கொண்டான்.
மேலும் யசிந்தன் கிராமத்தில் எந்த
விடயத்திற்கும் வெட்டுவதும், மிரட்டுவதும், அடிப்பதும்,
கொடுமைப்படுத்துவதும் வழக்கம். இந்த வகையில் பலதடவைகள் பலராலும் பொலிஸ்
முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டும் பின்னர் அவனது பயமுறுத்தலின் காரணமாக
சம்பந்தப்பட்டவர்களாலேயே அவை மீளப் பெறப்பட்டுள்ளன. அத்துடன் இவர் கள்ள மண்
ஏற்றி பொலிஸில் அடிக்கடி பிடிபடுவார்.
இவனுடைய தம்பியான ரஜிசேகரனும் மனைவியை
கொடுமைப் படுத்துவதும் கிராமத்தாட்களை கொடுமைப் படுத்துவதும் அடிப்பதுவும்
காயப்படுத்துவதுமாக எல்லோரையும் பயமுறுத்தி வைத்திருக்கின்றார். இவர்
ஆட்களை வெட்டிய வழக்குகளிற்கு தற்பொழுதும் சென்று வருகின்றார்.
கடந்த 2013ம் ஆண்டு ஐப்பசி மாதம்
அரியாலையில் வசித்த ஒரு 45 வயதுடைய பெண்ணும்; 15 நாட்கள் காணாமல்
போயிருந்தார். புpன்னர் நாச்சிமார் கோவில் தேர்முட்டியில் இவரது மோசமாக
பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டது. யசிந்தனின்
ஒரு நண்பனான கண்ணனுடைய ஆட்டோவிலேயே இப் பெண் கடைசியாக ஏறிச்
சென்றிருந்தார் எனத் தெரிந்து கொண்டோம். இக்கண்ணனின் ஆட்டோவையே யசிந்தன்
மரியவதனியை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு
பயன்படுத்தியுள்ளார். பச்சை ஆட்டோ வைத்திருக்கும் கண்ணனோடு சேர்ந்து
யசிந்தனுடன் இணைந்து அடிபாட்டில் ஈடுபடுபவர்களாக வன்னியில் இருக்கும்
பாசையூரைச் சேர்ந்த ராஜாக்குட்டியும் அரியாலையைச் சேர்ந்த செல்லக்கிளியும்
முள்ளியைச் சேர்ந்த ரஜி என்பவரும் குழுவாகச் சேர்ந்து செயற்படுபவர்கள்.
இந்த அனைத்து வன்முறைகளும் திட்டமிட்டு
தனது அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் பழிவாங்கலுக்காகவும்
மேற்கொள்ளப்பட்டவை. அதிலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை சமூகத்தையும்
பெண்களையும் அச்சுறுத்தும் ஆயுதமாகப் பாவிக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட
மரியவதனி மீதான வன்முறையின் போதும் முன்கூட்டியே அச்சுறுத்தல் விடப்பட்டதன்
பின்னரே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலைமையில் தற்பொழுது மரியவதனியின்
வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகிற காரணத்தால் இதில் சம்பந்தப்பட்ட
கிராமத்தவர்கள், உறவினர்கள் அனைவரும் யசிந்தனாலும் அவனது நண்பர்களாலும்
பழிவாங்கலுக்குட்படக் கூடும். குறிப்பாக இவனால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட
அனைவரும் எதிரகாலத்தில் இவனுக்கு எதிரான சாட்சிகளாக மாறக்கூடும் என்பதால்
அதிகளவிலான அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடும்.
இவ்வளவு கொடுரமான வன்முறைகளை செய்யும்
யசிந்தனோ அவனது நண்பர்களோ எமது சமூகங்களில் நடமாடவிடுவதினால் இன்னும்
அதிகமான பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதுடன்,
அவர்களது குடும்பங்களும் வாழ முடியாதநிலை ஏற்படும்.
எனவே தயவு செய்து மேற்படி நபரின்
குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தவும், இவனுடன் தொடர்புடைய
ஏனைய வன்முறைகளைப் பற்றி துரித விசாரணை மேற்கொள்ளவும், இவனுடன் தொடர்புடைய
ஏனைய வன்முறையாளர்களை விரைவில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தவும், எமது
சமூகங்களில் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதற்கும்,
தங்களுடைய பதவி மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்தி தகுந்த நடவடிக்கைகளை
விரைவாக செய்துதர வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
சமூகத்திலுள்ள அனைவரதும் நிம்மதியான
அச்சமற்ற வாழ்வுக்காக எமது கிராமத்துக்கு கிடைக்கும் நியாயமானது எமது
பிரதேசத்தில் நிகழும் ஏனைய இது போன்ற வன்முறைகளைக் குறைக்கவும்; ஏனைய
கிராமங்களிற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாகவிருக்க வழிவகுக்க வேண்டும்
என்று கோருகின்றோம்.
தாங்களும் இதுபற்றி கவனத்தில் எடுப்பதுடன்
இவ்விடயங்களில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் இதை அறியத்தந்து உரிய
நடவடிக்கைகளை எடுக்க மீண்டும் மீண்டும் வலியுறுத்தும்படியும்
கேட்டுக்கொள்கின்றோம்.
மதிப்புக்குரிய தங்களுடைய
செயற்பாடுகளினாலும் தொடர் நடவடிக்கைகளினாலும் எமது கிராமத்திற்கும்,
பிரதேசத்திற்கும் நியாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன்,
முள்ளிக் கிராம மக்கள்.
முள்ளிக் கிராம மக்கள்.
இக்கடிதத்தினை கீழ்வரும் உங்கள் எல்லோருக்கும் அனுப்புகின்றோம்
அரசஅதிபர், மாவட்டச் செயலகம்
ஆயர், ஆயர் இல்லம், யாழ்ப்பாணம்
பங்குத்தந்தை, யூதாததேயு தேவாலயம், முள்ளி
பிரதேச செயலர், பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்
பிரதேச செயலர், பிரதேச செயலகம், நல்லூர்
பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்டச் செயலம், யாழ்ப்பாணம்
பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்
பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்
பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், நல்லுர்
கிராம சேவையாளர் J/96> J/61> J/62> J/90>
வைத்திய அதிகாரி சுகாதாரப் பிரிவு நாவலடி
வைத்திய அதிகாரி, சுகாதாரப் பணிமனை, கொக்குவில்
பணிப்பாளர், பிராந்திய சுகாதாரப் பணிமனை, யாழ்ப்பாணம்
பணிப்பாளர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்
பொறுப்பாளர், மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு, போதனா வதை;தியசாலை, யாழ்ப்பாணம்
பொறுப்பாளர், பால்நிலைசமத்துவத்திற்கு எதிரான வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக்குழு, போதனா வைததியசாலை, யாழ்ப்பாணம்
மனித உரிமை ஆணைக்குழு
அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம்
மகளீர் அபிவிருத்தி நிலையம்
விழுது
மனித உரிமைகள் இல்லம்
சமூக செயற்பாட்டு மையம்
கரிதாஸ் கியுடெக்
பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, யாழப்பாணம்
தேவை நாடும் மகளீர் அமைப்பு
இணைப்பாளர், சாந்திகம்
ஆசிரியர், வலம்புரி
ஆசிரியர், உதயன்
ஆசிரியர், தினக்குரல்
ஆசிரியர், தினமுரசு
ஆசிரியர், தமிழ்மிரர்
பணிப்பாளர், சக்தி தொலைக்காட்சி
கௌரவ முதலமைச்சர், வடமாகாணசபை
திருமதி அனந்தி சசிதரன், உறுப்பினர், வடமாகாணசபை
கௌரவ ஆளுநர், வடமாகாணம்
கௌரவ அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா
தலைவி, முள்ளி மாதர் சங்கம்
தலைவி, நாவலடி மாதர் சங்கம்
தலைவி, பூம்புகார் மாதர் சங்கம்
தலைவி, கொழும்புத்துறை மாதர் சங்கம் (J/61> J/62)
தலைவி, நாவற்குழி மாதர் சங்கம்
தலைவி, மணியந்தோட்ட மாதர் சங்கம்
தலைவர், எழிலூர் சனசமூக நிலையம்
தலைவர், முள்ளி சனசமூக நிலையம்
தலைவர், நாவலடி சனசமூக நிலையம்
தலைவர், பூம்புகார் சனசமூக நிலையம்
பொறுப்பாளர், இலவச சட்டஉதவி ஆணைக்குழு, யாழ்ப்பாணம்.
தலைவர், சட்த்தரணிகளின் சங்கம், யாழ்ப்பாணம்
பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலையம், யாழ்ப்பாணம்
பொலிஸ் அத்திகட்சர், பொலிஸ் நிலையம், காங்கேசன்துறை
அதிபர், யாழ் அரியாலை ஹீ பார்வதி வித்யாசாலை
பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களால் ஆனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இது.
பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களால் ஆனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இது.
நன்றி: குளோபல் தமிழ் செய்தி