யாழ்ப்பாணத்தில் அகதிகளாக்கப்படும் மக்கள் : பண வெறியும் பாசிசமும்!!!

Chunnakam-well-23.08.2014மலேசியாவைத் தளமாகக் கொண்ட எம்.ரி.டி கப்பிடல் என்ற பல்தேசிய வர்த்தக நிறுவனம் இலங்கையில் நோர்தேர்ன் பவர் என்ற நிறுவனத்தின் 80 வீதமான பங்குகளை வாங்கிக்கொண்டது. நோர்தேர்ன் பவர் என்ற நிறுவனத்தை ஜெகான் பிரசன்ன அமரதுங்க என்ற தனி மனிதனே நடத்திவந்தார். நோர்தன் பவர் நிறுவனதினூடாக சுன்னாகம் மின்சார உற்பத்தி நிலையத்தை வாங்கிக்கொண்ட எம்.ரி.டி கப்பிடல் அங்கு மின்சார உற்பத்தியை 2008 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஆரம்பித்தது. அதுவரையில் டீசல் பாவிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் பேர்னாஸ் கழிவு எண்ணையைப் பயனபடுத்தி உற்பத்தி செய்யப்பட்டது.
கட்டுமானத்துறை, நிதி முதலீடு போன்ற துறைகளில் ஈடுபட்டிருந்த பன்னட்டு நிறுவனமான எம்.ரி.டி கப்பிடல் யாழ்ப்பாணத்திலேயே முதல் தடவையாக மின்சார உற்பத்தியைப் பரிசோதித்தது. போரால் விழுங்கப்பட்ட மக்களின் வாழ்கையின் மீது பரிசோதனை நடத்த ஆரம்பித்த எம்.ரி.டி கப்பிடல் தனது இலங்கைக் கிளையை எம்.ரி.டி வோக்கேர்ஸ் என அழைக்க ஆரம்பிதது.
ராஜபக்ச குடும்பத்தின் நண்பரான ஜெகான் அமரதுங்க எம்.ரி.டி இலங்கைக் கிளையின் துணைத் தலைவரானார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் சிறிய நிலப்பரப்பில் பேர்னாஸ் எண்ணையைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்பதைக் கூற எவரும் முன்வரவில்லை.
இலாப வெறியை நோக்கமாகக் கொண்ட மலேசிய நிறுவனம் அதிக வெப்பத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் கழிவுகளை வெளியேற்றுவதற்கான விதி முறைகள் எதனையும் கடைப்பிடிக்கவில்லை.
கிழக்கிலும் வடக்கிலும் பயங்கரவாதம் தலையெடுக்கிறது என்று கூறி அனைத்து வளங்களையும் சூறையாடும் இலங்கை அரசு இவ்வாறான விதிமுறைகளைக் கையாளவில்லை தவிர, விதி முறைகளுக்குப் பதிலாக தங்களது லஞ்சத் தொகையை மட்டுமே எதிர்பார்க்கும் ராஜபக்ச பாசிஸ்டுக்கள் சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணப் பகுதிகளைச் சுரண்டுவதற்கு எம்.ரி.டி இற்கு அனுமது வழங்கியது.
உற்பத்தியில் கசிவு ஏற்பட்டாலோ, எண்ணைக் கழிவுகள் முறையாக வெளியேற்ற்ப்படாவிட்டாலோ கதிரியயக்கம் போன்ற உச்ச பட்ச அபாயங்கள் ஏற்படும் என பல நாடுகளில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தவிர, விவசாய உற்பத்தி நிலங்கள் வரண்ட நிலங்களாக மாறு அபாயம் ஏற்படலாம் என்று பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுன்னாகம் கோப்பாய் போன்ற பகுதிகள் வசிக்கும் மக்களின் நீரில் எண்ணைத் தன்மை கலந்திருப்பதை உணர ஆரம்பித்தனர்.
இதனால் வயிற்றுப்போக்கு, உடல் வீக்கம் போன்ற நோய்கள் ஏற்படுவதை குடியேற்ற வாசிகள் உணர ஆரம்பித்தனர்.
அரச அலுவலகங்களில் மக்கள் முறையிட்டுப் பலன் கிடைக்கவில்லை. இறுதியாக எம்.ரி.டி இற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல் மன்னாரில் எண்ணை வருகிறது என்றால் ஏன் யாழ்ப்பாணக் கிணறுகளில் எண்ணை வராது என்று கோமாளித்தனமாக கேள்விகளை எழுப்பினார்.
பல்தேசிய வர்த்தக நிறுவனத்தின் பண வெறிக்காக சொந்த நிலங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ள மக்களை ராஜபக்ச பாசிஸ்டுக்கள் பயங்கரவாதிகள் என கூறினாலும் வியப்படைவதற்கில்லை.
யாழ்ப்பாணத்தில் உலகின் பல்தேசிய நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் போத்தல் நீரை யாரும் பயன்படுத்துவதில்லை. வீடுகளிலேயே அமைக்கப்பட்டிருக்கும் கிணறுகளிலிருந்து இயற்கையின் நீர்ச்சுவையோடு மக்கள் வாழப்பழகியுள்ளனர்.
எம்.ரி.டி இடம் லஞ்சம் வாங்கிய ராஜபக்ச கும்பல் இதுவரையில் போத்தல் நீர் வியபார நிறுவனங்களிடம் பேரம் பேச ஆரம்பித்திருப்பார்கள்.
ஐரோப்பாவிலுள்ள சுற்றுச் சூழல் சட்ட நிறுவனங்களிடம் இனியொரு பேசிய போது எம்.ரி.டி இற்கு எதிரான சர்வதேச வழக்குத் தொடர்வாதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் என்றார்கள்.

            நன்றி: இனியொரு