ஐ.நா விசாரணைக்காக மக்கள் சாட்சியம் அளிப்பதை இலங்கை அரச படைகள் கட்டுப்படுத்தி வருகின்றன.
பொறுப்புக்கூறல் மற்றம் நல்லிணக்கம் தொடர்பில் நீண்டகால - நிலையான தீர்வொன்று தொடர்பில் அரசு மீளச் சிந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இதன்போது ஐ.நா விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க விரும்புவோரைத் தடுப்பது என்பது அடிப்படை உரிமை மீறலாகும் என்றும்இ நீதிக்கான உரிமையையும் அப்பட்டமாக மீறும் செயலாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியில் சாட்சிகளைத் திரட்டினார் என்ற பெயரில் இடம்பெற்ற கைது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை மக்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்ற அநீதிகள் தொடர்பில் சாட்சியங்களை சுயாதீனமாக வழங்கி வருகின்றனர்.
மக்கள் சாட்சி வழங்கும் நடவடிக்கையை தடுக்க பல்வேறு உத்திகளையும் இலங்கை இராணுவத்தினர் மேற் கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான சாட்சியம் வழங்கும் சாட்சிகளை ஐ.நா பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குளோபல் தமிழ் செய்தியாளர்