பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான
யாழ்தேவி ரயில் பயணம்; யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. பளையிலிருந்து
யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்த மஹிந்த பின்னர்
கொடிகாமம்,நாவற்குழி பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரத
நிலையங்களையும் திறந்து வைத்ததுடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரதான
பகையிரத நிலையத்தையும் திறந்து வைத்தார்.
பளை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்.தேவி புகையிரதத்தில் பயணத்தை தொடர்ந்த மகிந்தவுடன்,; டக்ளஸ் தேவானந்தா, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன போக்குவரத்து பிரதியமைச்சர் றோகன திஸநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் வை.சிங்ஹா, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, அதிகாரிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
இந்திய அரசின் 800 மில்லியன் ரூபா செலவில் வடபகுதிக்கான புகையிரதப் பாதை மீள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்த யாழ்.தேவி திரும்பி போகாத வகையில்
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது இதனையடுத்து
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கிற்கான புகையிரதப் பாதைகள்
முற்றாக அழிந்தும் சேதமடைந்தும் இருந்த நிலையில் மகிந்த சிந்தனைக்கு
அமைவாக இந்திய அரசின் நிதியுதவியுடன் புகையிரதப் பாதை வவுனியா
ஒமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் பாதைகள் மீள்புனரமைப்பு செய்யப்பட்டுள்ள
நிலையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைவரையிலான புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பளை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்.தேவி புகையிரதத்தில் பயணத்தை தொடர்ந்த மகிந்தவுடன்,; டக்ளஸ் தேவானந்தா, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன போக்குவரத்து பிரதியமைச்சர் றோகன திஸநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் வை.சிங்ஹா, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, அதிகாரிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
இந்திய அரசின் 800 மில்லியன் ரூபா செலவில் வடபகுதிக்கான புகையிரதப் பாதை மீள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைவரையிலான புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி:உலக தமிழ்ச் செய்திகள்
வழி | |
---|---|
தொடக்கம் | கோட்டை (கொழும்பு) |
முடிவு | காங்கேசன்துறை (இடைநிறுத்தம்); தற்காலிகமாக பளை வரை |
Service frequency | தினமும் |
தொடருந்து இலக்கம் | 4001 (கொழும்பு கோட்டை-ஓமந்தை) 4002 (ஓமந்தை-கொழும்பு கோட்டை)[2] |
இலங்கை வடக்கு தொடருந்துப் பாதை | |
---|---|