சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி: பெங்களூர் நிதிமன்றம் உத்தரவு !!!

(பெங்களூர்,இந்தியா)
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று நீதிபதி குன்ஹா உத்தரவுப் பிறப்பித்துள்ளார். மேற்கண்ட நால்வருக்கும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் தலா நான்கு வருட சிறைத் தண்டனை என்று அறிவிக்கப் பட்டதோடு நால்வருக்கும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஜெயலலிதாவுக்குப் 100 கோடி ரூபாயும், மற்ற மூவருக்கும் 10 கோடி ரூபாயும் அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் சற்று நேரத்தில் அரசு வழக்கறிஞர் இது குறித்த அதிகாரப் பூர்வத் தகவல்களை, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே தடை செய்யபட்ட பகுதிக்கு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்து அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு உடல்நலப் பரிசோதனையும் நடைபெறும் என்றும் தெரிய வருகிறது. ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன் இதை அரசு வழக்கறிஞர் உறுதி செய்தும் உள்ளார். மேற்கண்ட தகவல் காலை 11 மணிக்கே ஜெயலலிதாவுக்கு தெரிய வந்துள்ளது என்றும், இதனால் ஜெயலலிதா மயங்கி விழுந்தார் என்றும் கூறபடுகிறது. இடையில் ஜெயலலிதா வந்து அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்து இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு சென்றார் என்றும் கூறப்படுகிறது. ஜெயலலிதா முதல் குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, அவரை பெங்களூரு காவல்துறையினர் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். கூட்டு சதி, ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், ஜெயலலிதாவை முதல் குற்றவாளி என்று, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் உடனடியாகத் தமது முதல்வர் பதவியையும், எம் எல் ஏ பதவியையும் இழக்கிறார் ஜெயலலிதா. மேலும் 6 ஆண்டுகள் எந்தவிதத் தேர்தலிலும் போட்டியிடத் தடையும் விதிக்கப்படுகிறது. இவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரோ ஜெயலலிதாவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தண்டனைக் காலத்தை குறைக்க வேண்டும் என்று வாதிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே அதிமுகவினர் 144 தடையுத்தரவை மீறி தடைப் பகுதிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் எங்கும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டு அதிகபட்ச வன்முறையில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர். தமிழக காவல் துறையினர் இதைக் கண்டும் காணாத நிலையில் இருந்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கருணாதி உருவப் படங்களை எரித்தும், கருணாநிதி சிலைகளை உடைத்தும், போக வர இருக்கும் பேருந்துகளில் அதிமுகவினர் கல் எரிந்தும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் பேருந்துகள் இயங்கவில்லை, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தமிழக மக்கள் அச்சத்திலும், பதற்றத்திலும் இருந்து வருகின்றனர். காஞ்சீபுரத்தில் பேருந்து ஒன்று எரிக்கப்பட்டுள்ளது என்பது இவ்வேளையில் வேதனையுடன் குறிப்பி வேண்டியதாகியுள்ளது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியான நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து தமிழக ஆளுநரிடம், மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என்று தீர்ப்பு வெளியான நிலையில், பெங்களூரு பார்ப்பன அக்ராஹர சிறை வளாக நீதிமன்றத்தை சுற்றி 3 கிலோ மீட்டருக்கு 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது. அங்கு அதிமுகவினர் அத்துமீறி நுழைந்து கலவரத்தைத் தூண்டியதால், அவர்களில் 150 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இரண்டு நாட்களுக்கு சுற்றி 5 கிலோ மீட்டர் அளவுக்கு 144 தடையுத்தரவை கர்நாடக போலீசார் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடையடைப்பு, வன்முறை, பேருந்து மீது கல் எறிதல், பேருந்துகள் மற்றும் வாகனங்களை தாக்குதல் என்று பல்வேறு குற்ற செயல்களில் அதிமுகவினர் தொடர்ந்து ஈடுபட்டு, தமிழகம் முழுவதும் பதற்றம் நீடித்து வருகிறது. இதைக் கண்டும் காணாமல் போலீசார் இருந்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகிவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக ஆளுநரிடம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து ஆளுநர் தமிழக உள்துறை செயலர் அவர்களிடம் கேள்வி எழுப்ப, அவர் தமிழகத்தின் டிஜிபி அலுவலகங்களுடன் தொடர்புக் கொண்டு சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும்,அதை சீர் செய்ய வேண்டும் என்பதுக் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.