யாழ்/சுழிபுரம் , திருவடிநிலை சைவத்தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!!!

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் ஏற்பாட்டில் சுழிபுரம், திருவடிநிலை சைவத்தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் ஏற்பாட்டில், புலம்பெயர் நாட்டைச்சேர்ந்த முரளீதரனின் நிதி உதவியுடன் சுழிபுரம் , திருவடிநிலை சைவத்தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வடமாகாண கல்வி அமைச்சருடன் குறித்த பாடசாலைக்கு அண்மையில் சென்று, பாடசாலையின் நிலைமைகளை அவதானித்த உறுப்பினர், முதற்கட்டமாக ரூபா 50,000 வழங்கி வைத்தார்.

பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ரூபா.30,000 பெறுமதியான கற்றல் உபகரணங்களும், மாணவர்களின் காலை உணவுக்கான நிதியுதவியாக ரூபா .20,000 வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினருடன், உதவியை வழங்கிய முரளீதரன், வலி.மேற்கு பிரதேச சபைத்தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானை கோட்டக்கல்விப்பணிப்பாளர், மாணவர்கள் மற்ரும் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

















நன்றி:http://onlineuthayan.com/images/footerlogo.jpg