யாழ்ப்பாணத்தில் மூன்று தமிழ் மன்னர்களின் சிலைகள் திறந்து வைப்பு !!!

யாழ்ப்பாணத்தில் மூன்று தமிழ் மன்னர்களின் சிலைகள் திறந்து வைப்பு
யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தில் மூன்று தமிழ் மன்னர்களின் சிலைகள் நேற்று திறந்து வைக்கப்பட்டன.
தமிழ் மன்னர்களான எள்ளாளன், பண்டாரவன்னியன் மற்றும் பரராஜசேகரன் ஆகிய மூன்று மன்னர்களின் சிலைகளே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலை திறப்பு நிகழ்வின் போது இந்து கிறிஸ்தவ மதத் தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றதுடன், விசேட பூஜைகளும் நடத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த நிகழ்வில் யாழ். மாநகர சபை மேயர், யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



நன்றி: நியூஸ் 1st செய்தி சக்தி.