விசாரணைக்குழு நேர்மையானது, அனுபவம் வாய்ந்தது இலகுவில் நிராகரிக்க முடியாதது - சொல்ஹெய்ம்-
இலங்கையில் இடமபெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்தக்குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள சர்வதேச குழுவினர் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அதனுடன் தொடர்பு பட்டிருந்த பலரை விசாரணைக்காக அழைக்கவுள்ளதாக ஜெனிவா இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனடிப்படையில் இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்கெய்ம் உட்பட முக்கிய பிரதிநிதிகள் விசாரணைககாக அழைக்கப்படலாம் என தெரிய வருகினறது. இதேவேளை கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வாரஇதழுக்கு கருத்து தெரிவித்துள்ள சொல்ஹெய்ம் தன்னை அழைத்தால் அதன் முன்னால் சென்று சாட்சியமளிக்க தயார் என மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விசாரணைக்குழுவை நேர்மையானது, அனுபவம் வாய்ந்தது இலகுவில் நிராகரிக்க முடியாதது என்றம்குறிப்பிட்டுள்ளார்