"நான் எனது கௌரவத்தை இழந்து விட்டேன், அதை நான் மீண்டும் எவ்வாறு பெறுவது" என ராஜ் கதறியழுதார் !!!

"போரில் ஒரு ஆயுதமாக, பாலியல் வல்லுறவு பயன்படுவதை நிறுத்த பிரபலங்கள் இணைந்து போராட வேண்டும்" தமிழில் ரஜீவன்:-
"நான் எனது கௌரவத்தை இழந்து விட்டேன், அதை நான் மீண்டும் எவ்வாறு பெறுவது" என ராஜ்  கதறியழுதார்:நன்றி:
குளோபல் 
தமிழ்
செய்தி
வலையமைப்பு










இலங்கையை சேர்ந்த ராஜ் என்ற இளைஞன் "Unlocked" என்ற நாடகத்தை பார்த்தபடி இருக்கிறான், இது பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் பற்றியது, அதில் ஒரு பாத்திரம் அவனை பிரதிபலிக்கின்றது.

இலங்கையில் பல வருடங்களுக்கு முன்னர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு சிறையிலிருந்து பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்து தற்போது இலண்டனில் வாழுகின்ற போதிலும், ராஜினால் கடந்த கால பயங்கரங்களின் பிடியிலிருந்து மீள முடியவில்லை அந்த ஞாபகங்கள் அவரை வதைக்கின்றன.

குறிப்பிட்ட நாடகத்தில் நடிக்கும் நடிகனொருவன் ராஜின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அனுபவங்களை வாசிக்கிறான்:

Celebrities Join the Fight to Stop Rape as a Weapon of War - By Janine di Giovanni
newsweek- குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக  தமிழில் ரஜீவன்:-
பல மாதங்களாக நான் அந்த சிறையிலேயே வைக்கப்பட்டு இருந்தேன். சாளரங்கள் இல்லை, கட்டில் இல்லை, தலையணை இல்லை. நான் எப்போதும் சிறையின் மூலையிலேயே ஒதுங்கியிருந்தேன். எனக்கு  எதுவும் நடக்கலாமென அஞ்சினேன் அதை நான் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை.   அவ்வேளைகளில் எல்லாம் அம்மாவை நினைத்துக் கொண்டேன்.
நாடகம் அப்படியே தனது அனுபவங்களை பிரதிபலிப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியாததாய் இருநத்து. அவரால் பேசமுடியவில்லை, கண்களில் நீர். ஒரு கட்டத்தில் அவர் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்த எக்செல் மாநாட்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார். மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்காக தேம்ஸ் பக்கமாக நடந்தா
நான் எனது கௌரவத்தை இழந்து விட்டேன், அதை நான் மீண்டும் எவ்வாறு பெறுவது என கதறியழுதார்.
பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கும் ஏஞ்சலினா ஜொலியும் இணைந்து ஏற்பாடு செய்த மோதல்களில் பாலியல் வன்முறைகள் குறித்த சர்வதேச மாநாடு இடம்பெற்ற மண்டபத்தி;ல் காட்சி;க்கு வைக்கப்பட்டிருந்த யுத்தக் குற்றங்கள் குறித்த படங்களை பார்வையிடுவது கூட அவரால் முடியாததாகயிருந்தது.
மோதல்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பது குறித்த சர்வதேச ஒழுக்காற்று விதிமுறைகள் அடங்கிய பிரகடனத்தில் உலக நாடுகளை கைச்சாத்திட செய்வதும், இதன் மூலம் இவ்வாறன குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தப்பிப்பதை கடினமாக்குவதுமே லண்டன் மாநாட்டின் நோக்கம். மனித உரிமை சட்டத்தரணிகள், ஆர்வலர்கள், வெளிவிவகார அமைச்சர்களுடன் ராஜ் போன்ற பாதிக்கப்பட்டவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
மௌனங்களே மோதல்களில் பாலியல் வன்முறைகள் ஊக்குவிக்கப் படுவதற்கான முக்கிய காரணம் என்றார் ஜொலி தனது ஆரம்ப உரையில் தெரிவித்தார். ஹேக் இதனை ஏற்றுக் கொண்டார். பாலியல் குற்றங்கள் அவமானத்தை அளிக்கக் கூடாது. மாறாக இது மக்களை விழித்தெழ வைக்க வேண்டும் என நியுஸ்வீக்கிற்கு தெரிவித்தார். நவீன உலகின் சகல வகையான தொலைத் தொடர்பு சாதனங்களுக்கு மத்தியலும் இவ்வாறான பாலியல் குற்றங்கள் இடம் பெறுகின்றன. ஆனால் இந்த நிலை மெல்ல மாறுகிறது என்றார் ஹேக்.
ராஜ் இன் கதை துயரமானது ஆனால் இலங்கையில் அடிக்கடி கேள்விப்படக் கூடியது. இலங்கை இராணுவம் அவரை விடுதலைப் புலி என குற்றம் சாட்டியது. ஆனால் எனக்கு வன்முறை பிடிக்காது எந்த ஆயுதங்களையும் கையில் தொட்டுக் கூட பார்த்ததில்லை என்கிறார் ராஜ்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சட்டத் தரணிகளும் மனித உரிமை பணியாளர்களும் தெரிவித்த தகவலின் படி யுத்தத்திற்கு பிந்திய நிலை இலங்கையில் அதிக மோசமாக உள்ளது. ஜனாதிபதி மகிந்தவினதும் அவரது குடும்பத்தினதும் பரம்பரையினர் ஆட்சி புரிந்து வருகின்றனர். தண்டனையிலிருந்து இருந்து விலக்களிக்கப்படுதல் மோசமடைந்துள்ளது.
இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை தோற்கடித்து ஐந்து வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையிலும் தமிழ் ஆண்களும் பெண்களும் கடத்தப்படுதல், சித்திரவதை செய்யப்படுதல் போன்றவை இடம்பெறுகின்றன என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இன்னும் யுத்தம் முடிவடையவில்லை எனக் கூறுகிறார் இறந்தவர்களை இன்னும் எண்ணுதல் எனும் நூலின் ஆசிரியரும் ஊடகவியலாளருமான பிரான்சிஸ் கரிசன். குறிப்பாக புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஆண்கள், பெண்களைப் பொறுத்த வரையில் அவர்கள் கடத்தப்டுகின்றனர், வேட்டையாடப் படுகின்றனர் எஞ்சி இருப்போரை தேடி அழிக்கும் நடவடிக்கை இடம் பெறுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசு நவீன மென் பொருட்களையும் பயன்படுத்துகிறது, தலையாட்டிகள் போன்ற முறையையும் பயன்படுத்துகிறது என்றார் அவர்.
எனினும் சோமாலியா, பால்கன், மத்திய கிழக்கு, ஆபிரிக்கா போன்ற நாடுகளிள் பாலியல் வன்முறைக்கு உள்ளானவர்களுக்கு மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இலங்கையர்களின் குரலுக்கு சந்தர்ப்பம் இல்லை.
இலங்கையில் யுத்தத்தில் பாலியல் வன்முறை என்ற விடயத்தை கருத்தில் கொள்ளும் போது இந்த நாட்டை கொங்கோ, பொஸ்னியா போன்றவற்றுடன் ஒப்பிட வேண்டும் என கருதுகிறேன் என்கிறார் நிம்மி கௌறிநாதன்----அமெரிக்க அரச சார்பற்ற அமைப்பொன்றை சேர்ந்தவர். ஏன் இலங்கையின் இந்த நிலை பெருமளவிற்கு வெளியில் வரவில்லை அது மறைக்கப்பட்ட யுத்தம். பிரிட்டனும் அமெரிக்காவும் அந்த நாட்டுடன் தொடர்ந்தும் வர்த்தக உறவுகளை வைத்திருக்க விரும்புவதா? இதற்கு காரணம் என அவர் கேள்வி எழுப்பினார்.
ராஜ் பிரிட்டனுக்கு வந்த பின்னர் தற்கொலை செய்ய முயன்றவர்களில் சிலர். இங்கும் அவர் உரிய விசா இல்லை என்ற குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார். நாடு கடத்தப்படுவதற்காக காத்திருக்கிறார். இலங்கையின் தனிமைச் சிறையில் தவித்த வேதனைப்பட்ட அந்த நாட்கள் அவருக்கு நினைவில் இருக்கின்றன.
அவர்கள் என்னை நிலத்தில் தள்ளினர், நிர்வானமாக்கினர், தலைகீழாக தூக்கிப் பிடித்து மூச்சு திணறச் செய்தனர் பின்னர் மோசமான செயல்களை செய்தனர் என்கிறார் அவர். நான் அந்த வேளை வீட்டில் இருந்து மிகத் தொலைவில் இருந்தேன் இப்போது நினைத்தாலும் மூச்சு திணறுகிறது என்றார் அவர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்வொன்றின் போது மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ) தனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், லண்டனிலுள்ள கனடா தூதரகத்தின் சிறிய மதிலில் எறி -இலங்கையில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு குறிதது;  உரத்த குரலில் வாசித்தார்.
எனக்கு நீங்கள் இவ்வாறு செய்ய முடியாது எனக்கு ஒரு குழந்தையுள்ளது'எம. ஐ.ஏ வாசித்தார்,அவரது கரங்கள் நடுங்கின ஆனால் அது எநத பலனையும் தரவில்லை.. நான் அச்சத்தில் உறைந்துபோயி;ருந்தேன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கான நேரமதுவென நினைத்தேன். அடுத்தது பியன்கா ஜகர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளானவரின் அனுபவமொன்றை வாசித்த வேளை கண்ணீர் விட்டழுதார்.
ஒருவரை சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவு செய்வுது என்பது மிக அழிவை ஏற்படுத்தும் செயல்,ஒருவரை நிர்வாணமாக்கி வீதிக்கு அனுப்புவது போன்றது என்கிறார் பிரான்சிஸ் ஹரிசன்- இவர் இலங்கையில் பாலியல் வல்லுறவிற்கு உள்ளான பல பெண்களை சந்தித்தவர்.
இலங்கையில் பாலியல் வன்முறைக்கு உள்ளான  ஆண்கள் பெண்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருக்கும். அனேகமான சம்பவங்கள் யுத்தத்திற்கு பின்னரே இடம்பெற்றன என்கிறார் கௌறி நாதன். யுத்தத்தில் யார் வென்றது என்பதை காண்பிப்பதற்காகவே இந்த குற்றங்கள் இடம் பெற்றன என்றும் அவர் குறிப்பிடுகிறார். முன்னால் விடுதலைப் புலிகளை கண்டு பிடிப்பதற்காக இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் தகவல் வழங்குபவர்களால் நேர்மையற்ற முறையில் அடையாளம் காணப்பட்ட நூற்றுக்  கணக்கானவர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகினர்.
ரஜினி 28 வயது அவ்வாறான ஒருவர். அவர் விடுதலைப் புலிகளுக்காக பணியாற்றினார். தபால்களையும் பொதிகளையும் அவர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது அவரது பணி. ஆனால் 2009 இல் யுத்தம் முடிவுறும் தறுவாயில் அவர் அதனை நிறுத்தி விட்டார். அதன் பின்னர் அவருக்கு தனது மற்றும் குடும்பத்தவரது பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டது. இலங்கையில் வடபகுதிக்குச் சென்ற அவர் அங்கு புதிய வாழ்க்கை வாழத் தொடங்கினார். ஆனால் தொடர்ச்சியாக அச்சத்திலேயே இருந்தார். தனக்கு ஆபத்து நெருங்கி வருவதை உணர்ந்தார்.
கடந்த வருடம் மாலை நேரத்தில் தமிழர்கள் அதிகம் அச்சப்படும் வெள்ளை வான் அவர் அலுவலகத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த வேளை பின் தொடர்ந்தது. அதிலிருந்து வெளியே குதித்தவர்கள் அவரது அடையாள அட்டையை கேட்டனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.பின்னர் அவரது கண்களை கட்டி,கட்டிவைத்து அடித்தனர்,  பெட்ரோல் நிரம்பிய பொலித்தீன் பையால் தலையை மூடிவிட்டு  சித்திரவதை செய்தனர்,சிகரட்டால் சுட்டனர்,இவ்வாறான விபரிக்க முடியாத சித்திரவதைகள் பல நாட்களுக்கு தொடர்ந்தன.
அதன் பின்னர் அவர் பலரால் பல நாட்களுக்கு பாலியல் வன்முறைக்குள்ளானர்.அவர் கொல்லப்படுவதற்கு முன்னா அவரை காப்பாற்றுவதற்காக குடும்பத்தவர்கள் லஞ்சம் கொடுத்து காப்பாற்ற முற்பட்டனர்;.பொய் சாட்சியம் அளிப்பதற்கு பல நாட்களாக மறுத்து வந்த அவர் பின்னா அதற்கு இணங்கினார்.அதன் பின்னரும் அவர் பாலியல் வன்முறைக்குள்ளானார்.
அவர்கள் சிகரெட்டால் சுடடு காயமேற்படுத்துவர், அதனை ஒரு அடையாளமாக பயன்படுத்துவர்,சில பெண்களின் உடலில் 30 சிகரெட் தழும்புகள் வரை காணப்படும்,அவர்கள் அதனை வைத்து அந்த பெண் முன்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவரா என்பதை அடையாளம் காண்பர் அதிகம் ஆடையால் மூடப்படாத இடங்களிலேயே சிகரெட் சூடு காணப்படும்,அது என்றென்றும் நிலைத்திருக்கும், பாதிக்கப்பட்டவர்களும். 
ரஜினா படகு மூலம் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு தப்பி வந்தார். ஆனால் ராஜ்  போன்று அவராலும் கடந்த காலங்களை மறக்க முடியவில்லை. இலங்கையில் இதுவரை யுத்தத்திற்கு பிந்திய குற்றச் செயல்களுக்காக யாரும் கைது செய்யப்படவில்லை. ஹேக், ஜோலி இன் முயற்சி வலுப் பெற்றால் ராஜ், ரஜினாவை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர்கள் இலங்கையில் சுதந்திரமாக நடமாட முடியாது.   
ஆட்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் பணம் பெற்றுக்கொண்டு விடுதலைசெய்யப்படுவது ஒரு ஒழுங்கை பின்பற்றி.  நடைnபுறுகிறது; ''என்கிறார் பிரான்சிஸ் ஹரிசன், பலருடைய கதைகளில் அச்சமூட்டகூடிய ஒற்றுமையுள்ளது, இலங்கை பாதுகாப்பு படையை சேர்ந்த பல பிரிவுகள் அதிலீடுபடுகின்றன, இது திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட  விதத்தில் இடம்பெறுகின்றது.''
"அவர்களுக்கு தேவையானவற்றை நான் தெரிவித்த பிறகும் என்னை தொடந்து காயப்படுத்தினர் நான் கதறினேன் கதறினேன் பயனில்லை" என்கிறார் ராஜி    .

  குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக  தமிழில் ரஜீவன்:-