ராஞ்சி(வட இந்தியாவில்): ஜார்கண்ட் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது நாக்கை பிளேடால் அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தூகடாவில் உள்ள மகாதேவ்கர்ஹா என்ற சிவபெருமான் கோவிலிலுக்கு லால் மோகன் சோரன் (வயது 17) இன்று காலை வந்தார். பயபக்தியுடன் அவர் கடவுளை வணங்கினார் பின்னர் திடீர் என சிவபெருமான சந்நிதியில் முன்னால் பிளேடு ஒன்றை எடுத்து திடீரென தனது நாக்கை அறுத்து ஒரு பாத்திரத்தில் பிடித்து காணிக்கை செலுத்தினார். இதனால் கோவிலில் இருந்தவர்கள்அதிர்ச்சியடைந்தனர். அவர் தன்னுடைய எழுதி வைத்து இருந்த ஒரு குறிப்பில் நான் எனது நாக்கை அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.தயவு செய்து என்னை கோவிலை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள். நான் சிவபெருமானின் காலடியில் இருக்க வேண்டும் என கூறி இருந்தார். ஆனால் கோவில் நிர்வாகி உடனடியாக லால்மோகன் சோரனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த இளைஞனுக்கு நாக்கை ஒட்ட வைக்க முடியவில்லை. தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப்பிட்டு வரும் லால்மோகன் சோரன் வாய்பேச முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த சம்பவம் குறித்து லால் மோகன் சோரன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தாலும், தன்னுடைய மகன் கடவுளுக்கு கொடுத்த காணிக்கையை எண்ணி பெருமைப்படுவதாக கூறினர். சிறுவயதில் இருந்தே தன்னுடைய மகன் பக்தியாக இருந்ததாகவும், சிவபெருமான் மீது அவன் மிகுந்த ஈடுபாடு உடையவன் என்றும் அந்த இளைஞனின் தாயார் லால்முனி சோரன் கூறினார்.