இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்களது
அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மே 18 நினைவேந்தல்
அனுஷ்டிக்கப்பட்டது.
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நேற்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் பொதுமக்களும் இணைந்து நினைவேந்தல் அனுஷ்டித்தனர்.
எனினும் நிகழ்வின் ஆரம்பம் முதல் சீருடையினரும் , புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு அவர்கள் மத்தியில் நிகழ்வு நடைபெற்றதுடன் நிகழ்வுகள் முழுவதும் அவர்களால் பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் யுத்தத்தால் தமது தாய் அல்லது தந்தையர் அல்லது இருவரையும் இழந்த கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகள், சீருடைகள், காலணிகள் மற்றும் அப்பியாசக்கொப்பிகளும் இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டன.
இதேவேளை, நிகழ்விடத்திற்கு வந்த இராணுவத்தினரும் , புலனாய்வாளர்களும் நீங்கள் யார்? எதற்காக இங்கு மக்கள் கூட்டம்? என்று கேள்விகளை கேட்க தொடங்கியுள்ளனர்.
எனினும் அதற்கு அலட்சியமாக பதிலளித்துவிட்டு நிகழ்வை ஆரம்பித்தார். அதன் போது எந்த நிகழ்வையும் நடத்த 3 நாட்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்று கூறி இராணுவத்தினர் நிகழ்வைத் தடுக்க முயன்றனர். எனினும் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.