ஐரோப்பாவில் இருந்து இலங்கை செல்லும் நபரை முன்கூட்டியே அறியும் கோட்டபாய !!!

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் தொடர்பான விபரங்களை, இலங்கை அரசு முன்கூட்டியே அறியக்கூடிய வசதிகளை அன் நாடு கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை போக்குவரத்து அமைச்சு செய்துகொண்ட ஒப்பந்தம் ஒன்றின் ஊடாகவே இந்த தகவல் பரிமாற்றம் ஏற்பட்டுள்ளதாக மேலும் அதிர்வு இணையம் அறிகிறது. இது தமிழர்களை பொறுத்தவரை மிகவும் பாதகமான ஒரு விடையமாக கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ள பல காரணங்கள் இருப்பதாகவும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். தற்போது இலங்கைக்கு செல்ல விசா நடைமுறை உள்ளது. எனவே விசாவை விண்ணப்பிக்கும் பயணிகள் தொடர்பான தகவல்களை இலங்கை தூதுவராலயம் உடனே பெற்றுக்கொள்ளும். ஆனால் இலங்கைக்கு விசா எடுக்காமல் (2 நாட்களுக்கு விசா தேவையில்லை) இலங்கை செல்லும் நபர்கள் தொடர்பாக உடனே அறியவும், மேலும் ரிரான்சிட் பயணிகள் தொடர்பாக முன் அறிவித்தலைப் பெறவும் இந்த ஒப்பந்தம் மிகவும் ஏதுவாக அமையும் என்று கூறப்படுகிறது. இலங்கை ஊடாகப் பயணிப்பவர்கள், மற்றும் 48 மணி நேர விசாவில் இலங்கை செல்லவுள்ள அனைவரது , பெயர் மற்றும் முகவரி தொடர்பான விடையங்களை, ஐரோப்பாவில் உள்ள விமான நிறுவனங்கள் இனி இலங்கைக்கு உடனடியாக அனுப்பிவிடும். இவை இலங்கையில் கட்டநாயக்காவில் உள்ள கம்பியூட்டரில் பதிவாகி விடுகிறது. அந்த கொம்பியூட்டரில் யார் யார் பெயர்களை அவர்கள் சிவப்பு பட்டியலில் போட்டு இருக்கிறார்களோ அவர்களது பெயர் ஐரோப்பாவில் இருந்து கிடைக்கப்பெற்றால் அவர்களை இலகுவாக இலங்கைப் பொலிசார் கைதுசெய்துவிடுவார்கள். இந்தப் பாரிய ஏற்பாட்டை இலங்கை பாதுகாப்பு அமைச்சு திட்டம்போட்டு, போக்குவரத்து துறை அமைச்சின் ஊடாக நிறைவேற்றியுள்ளது. ஈழத் தமிழர்களை குறிவைத்தே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்கள். எனவே செயல்பாட்டாளர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.