சுரங்கத்தில் வாடிய தொழிலாளி: 17 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட அதிசயம்

சீனாவில் சுரங்கம் ஒன்றில் சிக்கிய தொழிலாளி சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன.
இங்குள்ள ஒவ்வொரு சுரங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டில், இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டதால் ஏராளமான சுரங்கங்கள் சரிந்து அப்படியே மண்ணோடு மண்ணாக புதைந்தன.
இச்சம்பவத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணிற்குள்ளேயே சமாதியாகினர்.
ஆனால் செங் வாய் (59) என்ற தொழிலாளி மட்டும் உயிருடன் இருப்பது சில தினங்களுக்கு முன்பு தெரியவந்துள்ளது.
சுமார் 17 வருடங்களாக மூடப்பட்ட சுரங்கம் ஒன்றின் உள்ளே தனிமையில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்து வந்த இவர், எலிகளை பிடித்து தின்றும், சுரங்கத்தில் வளரும் ஒருவகையான பாசி செடிகளை சாப்பிட்டும் தனது உயிரை கையில் பிடித்து வந்துள்ளார்.
இதனால் உடல் மெலிந்து, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கா
ணப்பட்ட அவரை, சில தினங்களுக்கு முன்பு சுரங்க ஆய்வாளர்கள் உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இவர் மீட்கப்பட்ட சம்பவம் உலகெங்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இது ஒரு கின்னஸ் சாதனையாகவும் கருதப்படுகிறது.