இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
குடி பானங்களில் போதைப் பொருட்கள் கலக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்பகுதிகளில் மதுபான சாலைகள், விடுதிகள் போன்றவற்றில் வழங்கப்படும் பானங்களில் போதைப் பொருட்கள் கலக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாக பிரித்தானிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரஜைகள் வழிப்போக்கர்களுடன் இணைந்து மதுபானம் அருந்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பிரஜைகள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் பதிவாக போதிலும், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையான சுற்றுலா முகவர் நிறுவனங்களின் ஊடாக பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
பணம் கடவுச் சீட்டுப் போன்றவற்றை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்பகுதி கரையோரங்களில் அமைந்துள்ள சுற்றுலா விடுதிகளில் அதிகளவில் மதுபானத்துடன் போதைப் பொருள் கலக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
தனிப்பட்ட ரீதியில் பிரித்தானிய பிரஜைகளை இலக்கு வைத்து வன்முறகைள் இடம்பெறுவதில்லை என்ற போதிலும், வெளிநாட்டுப் பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
குறிப்பாக கடன் அட்டை மோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.