சட்டவிரோத நிதி நடவடிக்கைகளான சீட்டு,
மற்றும் வட்டிக்கு கடன் பரிமாறும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று
யாழ்ப்பாணம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களில் மட்டும் நிதிப் பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களின் ஊடாக நிதி நடவடிக்கைகளை கையாள்வதன் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய யாழ். பொலிஸ் பரிசோதகர் அமரசேகர இது தொடர்பில் மக்களை அக்கறை செலுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
சீட்டு, மற்றும் வட்டிக்கு கடன் பரிமாற்றல் மூலம் பெருமளவு மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறான மோசடி நடவடிக்கைகளை கையாள்வதாயின் சிவில் வழக்குகள் மூலமே விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.