“என்னை ஏமாற்றியவள் உங்களுக்கு சொல்லி நியாயம் கேட்கலாம் எண்டு
நினைக்கின்றேன் “என மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி விட்டு இளைஞன் ஒருவர்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழ் சிறுப்பிட்டி தெற்கு
நீர்வேலிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் நிரூபன் நவரட்ணம் (வயது 23) என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை நேற்றிரவு தனது முகனூலில் குறித்த பெண்ணின் 188 படங்களையும் பதிவேற்றி விட்டு அப்பெண் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி பதிவொன்றையும் பதிவேற்றி விட்டே இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவது,
குறித்த இளைஞன் வீட்டில் எவரும் இல்லாத வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இன்று காலை 9 மணிக்கு பின்னரே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஏனெனில் குறித்த இளைஞன் இன்று காலை 9.05 மணியளவில் தனது நண்பன் ஒருவருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் தன்னை ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும்,ஏமாற்றிய பெண்ணின் பெயர் விபரங்கள் என்பன அம்மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார்.
ஆனால் அவரது தொலைபேசி இலக்கங்கள் எதுவும் அனுப்பவில்லை இதனால் சரியான தரவுகள் ஏதும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்படவில்லை ஆகவே ஊடகங்களும் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை என தெரிய வருகின்றது.
தற்போது இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.