விளையாட்டு மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை!
காணாமல் போனவர்களை மீட்கக் கோரும்
போராட்டத்தில் பங்கெடுத்தமைக்காக ஜெயக்குமாரி என்ற தாயாரும் விபூசிகா என்ற
சிறுமியும் இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்ட நிலையில் உலகெங்கிலும்
உள்ள தமிழ் மக்கள் ஈழத்தின் இன்றைய அபாய நிலமைகளை குறித்து வேதனையோடு உள்ள
நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுந்திருக்கிறது.
பொன் அணிகளின் போர் என்று கூறப்பட்டு
சென். பற்றிக் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும்
இடையில் நடந்த கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் ஏற்பட்ட தகராற்றில்
முன்னாள் மாணவன் ஒருவன் பரிதாபகரமாக அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.
ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24) என்ற
இளைஞனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி
பேரதிரச்சியை ஏற்படுத்தயுள்ளது. இதனால்யாழ் சமூகம் மாத்திரமின்றி பலரும்
அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொலிசார் இந்தமோதலை தடுத்து நிறுத்தாமல்
வேடிக்கை பார்த்தாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். எனினும்
விளையாட்டுக்காக ஒருவரின் உயிரையே பலியெடுக்கும் அளவில் மோதலில் ஈடுபடுவது
மிகவும் தவறான செயற்பாடு என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.