
இந்தக் குறிப்பை விபரன் என்ற வாசகர் விமர்சனப் பகுதியில் இணைக்கச் சொன்னார்... ஆனால் இதனை அனைவருதும் சிந்தனைக்கும் முன் வைப்பதற்காக இங்கு பதிவிடப்படுகிறது... இந்தக் குறிப்பிற்கு பதில் அளிப்பவர்கள் தனிப்பட்ட தாக்குதல்கள் அல்லாது ஆரோக்கியமான விவாதமாக முன்னெடுக்க வேண்டும் எனஅன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...
ஆ.ர்
அண்மையில் தமிழ் ஊடகங்களும் மக்களும் அசைபொட்டுக்கொண்டிருக்கும் மற்றொரு விடையம் தான் பெண்சிப்பாய்கள் இராணுவப்பயிற்சியின் போது ஆண் பயிற்சியாளர்களால் மூர்க்கமாக தாக்கப்படுவதாகும்.
இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியதென்பது மறுக்கமுடியாத ஒன்று.
ஆனால் இவ்வொளிப்பதிவின் பின்னணிகள் தோற்றுவிக்கும் சந்தேகங்களுக்கு விடையென்ன..?
முதலில் இராணுவப் பயிற்சியென்பது உலகின் எந்த மனிதாபிமானம்மிக்க (??) இராணுவமாயிருந்தாலும் அது எவ்வளவு கடினமாயிருக்குமென்பது சம்பந்தபட்டவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
இங்கே மனிதனேயமிக்க இலங்கை இராணுவத்தில் இத்தகைய தொன்று சிங்களப் பெண்களுக்கு நடக்கும் போது பெரும்பான்மைச் சிங்கள மக்களாலேயே இதனைப் பொறுக்க முடியாது துவண்டார்கள்.
அது தமிழ்ப்பெண்களென்ற எமது தமிழ் இணைய வல்லுனர்களின், இணைய சுழியோடிகளின் கண்டு பிடிப்பை ஆதாரமாக வைத்து இது புனைகதை என்றும் இராணுவத்துக்கும் இலங்கை அரசுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்த புலிகள் முயல்வதாகவும் அவர்களிற் சிலர் கற்பிதம் செய்தார்கள்.
தமிழர்களோ இராணுவத்தில் சேர்ந்த தமிழ்ப்பெண்களின் நிலையெண்ணியும் ஐ.நா வில் இலங்கை அடுத்த கேள்விக்கு எப்படிப்பதில் சொல்லப்பாகுதென்றும் பரபரப்பில் திளைத்து காத்திருக்கும் வேளையில் இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்து இராணுவத்தளபதி குற்றவாளிகள்
இனங்காணப்பட்டு விட்டார்கள், இராணுவ நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் அறிவித்துவிட்டார்.
இப்போ நம்முன்னிற்கும் வினாக்காள்.
1.எந்த காணொளியையும் பொய்யென சொல்லும் இலங்கை அரசும் அதன் படைகளும் இதை மட்டும் எப்படி, ஏன் நம்பினார்கள்?
2.இங்கே இத்தகைய ஆதரங்களுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் செய்த குற்றம்தான் என்ன அவர்களுக்கு இலங்கைச்சட்டத்துக்குட்பட்டு எதகைய உச்சகட்ட தண்டனை விதிக்கப்படலாம்?
3.இதகைய சிறுகுற்றங்களுக்கு சிறு தண்டனைகளை வழங்குவதோ அல்லது வழங்குவதுபோல் நடிப்பதன் மூலமோ யாருக்கு என்ன செய்தி சொல்லப்படுகிறது?
4.இவை இலங்கை அரசின் சார்பில் ஊடகங்களுடன் பேசுபவர்களுக்கு தமக்கெதிரான சவால்களை இலகுவில் சமாளிக்க எவ்வாறு உதவும்??
இந்த ஒளிப்பதிவு எப்படி வெளியில்வந்தது, அதனை முதலில் இணையத்தில் பதிவேற்றியது யார்? இதனை ஏன் முதலில் தமிழ் இணைய உலகில் பரவ விட்டார்கள், அதனை பொறுப்புடன் ஆராயாமல் பரபரப்பாக இணையங்களில் பரவ விட்ட இணைய உரிமையாளர்களின் இலக்கு என்ன? இந்த காணொளியில் அழுகின்ற பெண்கள் சிங்களத்தில் "அணே" என்று சொல்வது புரியவில்லையா? அல்லது புரிந்தும் இதனை முதலில் தமிழ் இணைய வெளியில் வெளிக்கொணர்ந்தவர்கள் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியுள்ளார்களா? இவை எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு, யாரால்? எதற்காக? ஏன் என்பதெல்லாம் அறிவியல்-அரசியல் ரீதியாக பார்த்தால் இந்த நாடகம் புரியும்.
உங்களுக்கு புரிகிறதா?
விபரன்.
நன்றி:
குளோபல் தமிழ் செய்தி