காணாமல் போன மலேசிய விமானத்தை, அதை இயக்கிய இரு விமானிகளில் ஒருவரான கேப்டன் ஜஹாரி அகமது ஷா கடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற மலேசிய விமானம், கடந்த 7ம் திகதி இரவு நடுவானில் திடீரென மாயமானது.
இதுநாள் வரையிலும் எவ்வித தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை, இந்நிலையில் விமானத்தை தலைமை பைலட் ஜஹாரி தான் கடத்தியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.விமானத்தை ஓட்டி சென்ற தலைமை பைலட் ஜஹாரி அகமது ஷா வீட்டில் மலேசிய பொலிசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர், அவரது குடும்பத்தினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.மேலும் உதவி பைலட் பாரூக் அப்துல் அமீது வீட்டிலும் சோதனை நடத்தினர், அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோதனையில் விமானிகள் தான் விமானத்தை கடத்தி இருக்ககூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
மாயமான விமானம் எம் எச் 370 கடத்தலுக்கு மிகவும் அபாயகரமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
விமானம் காணாமல் போனதை தொடரந்து விமானிகளின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
மலேசிய பொலிசார் தலைமை பைலட் ஜாகாரி அகமது ஷா மற்றும் உதவி பைலட் அகமது ஷா ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து சோதனைகள் முடிந்து அவர்கள் விமானத்தில் ஏறும் அனைத்து சிசிடிவி வீடியோ காட்சிகளையும் பார்த்து தடயங்கள் ஏதாவது கிடைக்கிறதா என் பார்த்து வருகின்றனர்.
விமானத்தில் உள்ள வீடியோ காட்சியில் விமானிகள் இருவரும் சோதனை செய்யப்பட்டு நடந்து வருவது தெரிகிறது.
அரசியல் காரணமா?
இங்கிலாந்து பத்திரிகை ஒன்று அரசியல் காரணங்களுக்காக தலைமை பைலட் ஷா விமானத்தை கடத்தி இருக்கும் சாத்திய கூறுகள் உள்ளதாக செய்தி வெளியிட்டு உள்ளது.
தலைமை பைலட் அரசியலில் ஆர்வமாக இருந்து உள்ளார், எதிர்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமின் ஆதரவாளராக இருந்து உள்ளார் எனவும் தெரிவித்து உள்ளது.
எதிர்கட்சி தலைவர் இப்ராஹிம் ஹோமோ செக்சுவல் வழக்கில் அவருக்கு நீதிமன்றம் 5 வருட சிறை தண்டனையை உறுதி செய்தது, இதனால் இதனால் தலைமை விமானி மிகவும் மனவருத்ததில் இருந்திருக்கலாம் என பொலிஸ் வட்டாரங்கள் அஞ்சுகிறது.
வெளிநாட்டை சேர்ந்த புலனாய்வு நிறுவனங்கள் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பின் புலம் குறித்து விசாரணை நடத்தியதில் யார் மீதும் சந்தேகப்படும்படியான தகவல்கள் இல்லை என கூறி உள்ளது.
பொலிசார் விமான கடத்தலுக்கு என காரணம் தொடர்ந்து 3 கோணங்களில் விசாரனை நடத்தி வருகின்றனர். நாசவேலை, தனிப்பட்ட அல்லது உளவியல் பிரச்சைனை காரணாமாக கடத்தபட்டதா. அல்லது பயணிகள் குழு, விமான ஊழியர்கள் மூலம் கடத்தபட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மலேசிய தலைமை பொலிஸ் அதிகாரி தான் ஸ்ரீ காலித் அபு பாகர் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இரு நாடுகளில்தான் விமானம் தரையிறங்கி இருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த விமானம் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மீதான விசாரணையில் குறிப்பிட்ட அந்த விமானி கலந்து கொண்டதாக மலேசிய அதிகாரிகள் கருதுகின்றனர்.
நேற்று தலைநகர் கோலாலம்பூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து விமானத்தை கட்டுப்படுத்த பயன்படும் சைமுலேட்டர் என்ற கருவியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதைக் கொண்டு விமானத்தை எப்படி காணாமல் போகவைப்பது என பயிற்சி எடுத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
விமானத்தை கண்டறியும் முயற்சியில் 25 நாடுகள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானத்தை அதன் சுற்றுப் பாதையிலிருந்து மாற்றி அந்தமான் கடற்பகுதியில் பறக்கும் வகையில் ஜஹாரி செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் அந்த விமானத்தை எங்காவது மறைவிடத்தில் தரையிறக்கி இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளதால் அந்நாட்டு அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த விமானம் காணாமல் போய், ஒன்பது நாட்கள் ஆகியும் இதுவரை விமானம் தொடர்பான சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.