02.03.2014 அன்று இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வருமாறு காணாமல் போனவர்களின் உறவினர்கள் அழைப்பு!!!

நாளை இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வருமாறு  காணாமல் போனவர்களின் உறவினர்கள் அழைப்புவடமராட்சி புலோலி மெ.மி.த.க பாடசாலைக்கு அருகில்  02.03.2014 அன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள கோபிதாஸ் மர்மான மரணத்திற்கும் சர்வதேசத்திடம் நீதி கோரியும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கவும் மற்றும் காணமால் போனவர்களை தேடியும் வலுயுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னனியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனநாயகரீதியான நீதிப் போராட்டத்திற்கு பொதுமக்கள் தமிழ் உணர்வாளர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் கடத்தப்பட்டு காணால் போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் இது தொடர்பாக கருந்து தெரிவிக்கையில் எமது உறவுகள் எதுவித குற்றமும் செய்யமால் சந்தேகத்தின் அடிப்படையில் பல வருடங்களாக பல சித்திரைவதைகளை அனுபித்து எதுவித விசாரணைகள் இன்றி சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இதானால் எமது குடும்பம் செல்லானா துயர்களை அனுபவித்து வருகின்றனர். அத்துடன் பொருளாதரரீதியாகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று காணமால் போனவர்கள் தொடர்பாக இதுவரை எதுவிதமான தகவல்களும் இல்லாமால் அவர்களின் குடும்பங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கைதிகள் படுகொலை செய்யபடுவதும் மர்மான முறையில் மரணமடைவதையும் மற்றும் சித்திரைவதைக்கு உள்ளாக்கபடுவது உடனடியாக நிறுத்தப்பட்டு கைதிகளை உடனடியாக பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும.; அத்தடன் காணமால் போனவர்களை மீட்டு அவர்களின் குடும்பத்திடம் அரசாங்கம் ஒப்படைக்க  வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை நடைபெறும் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு கட்சி போதம் இன்றியும் ஆயிரகான மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என காணாமல் போன அரசியல் கைதிகளின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 
 
                                                  காப்புரிமை: குளோபல் தமிழ் செய்தி வலையமைப்பு