கிளிநொச்சியில் இளம் சமூகத்தினர் ஆபத்தான சூழலை நோக்கி செல்கின்றனர் -சிவில் சமூக பிரதிநிதிகள் கவலை !!!

கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் சமூகத்தினர் ஆபத்தான சூழலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர். இன்று(22-02-2014) முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக பிரதிநிதிகளின் கலந்துரையாடலின் போதே மேற்படி கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த சிவில் சமூக பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசலை மாணவர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் மதுபானம்,புகைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் அண்மைக்காலமாக அதிகமாக ஈடுபட்டு வருவதாகவும் இந்த செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் சில தரப்புகளின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கும் அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பகிரங்கமாகவே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு எமது கலாச்சாரத்திற்கு புறம்பான செயற்பாடுகளும் அதிகளவில் இளம் சமூத்தினரால் மேற்கொள்ளப்படுவதாகவும் ஆதாவது ஆடைகள் அணிவது முதல் பொது இடங்களில் நடந்துகொள்கின்ற முறைகள்,பழக்கவழக்கங்கள் என்பன கவலையளிக்கும் விடயமாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்படது.எனவே இது தொடர்பாக உரிய தரப்புகளுக்கு மாவட்ட சிவில் அமைப்பு சார்பாக கண்டிப்பான நடவடிக்கைகளுக்கு வலியுருத்த வேண்டும் எனவும் தெரிவிக்ப்பட்டது.

வழமை போல் கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளின் கலந்துரையாடல் இடம்பெற்றது இதில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் இங்கு பல்வேறுபட்ட சமூக மற்றும் பொது பிரச்சினைகள் ஆராயப்பட்டது. அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை உரிய அந்தந்த திணைக்களம் மற்றும் நிறுவனத்தினர் மேற்கொள்வதற்கு மாவட்டசிவில் சமூகங்களின் அமைப்பு சார்பாக அழுத்தம் கொடுக்கும் வகையில் தீர்மானங்களின் பிரதிகளை அனுப்பி வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் போது பாடசாலைகளின் அதிபர்கள,மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள் எனபலர் கலந்துகொண்டனர்.

               நன்றி : குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி.