மட்டக்களப்பு பிரதேசத்தில் ஸ்ரீலங்கா
சுதந்திர கட்சியின் கல்குடா வலய இணைப்பாளர் சந்திரபால என்பவரும், அவரது
சகாவான வந்தாறுமூலை கண்ணன் என்பவர் தலைமையிலான குழுவும் தமிழ் பெண்களை
கடத்தி சென்று பாசிக்குடாவில் உள்ள பிரபல ஹொட்டல்களில் பலவந்தமாக விபச்சார
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் உறவினர்களிடம்
தெரிவித்துள்ளனர்.
இந்த விடயங்கள் குறித்து யாருக்கும்
சொல்லக் கூடாது என அச்சுறுத்திய கண்ணன் என்பவர் மூன்று பெண்களுக்கு
30ஆயிரம் ரூபா பணத்தையும் வழங்கியுள்ளார். கொழும்பிலிருந்து வரும்
சிறிலங்கா சுதந்திர கட்சி பிரமுகர்களுக்கும் இப்பெண்கள் விருந்தாக
வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை களுவாஞ்சிகுடி எருவில் பகுதியில்
நேற்று பிற்பகல் தனியார் வகுப்புக்குசென்று திரும்பிக்கொண்டிருந்த மாணவி
கடத்தப்பட்ட நிலையில் இந்த மாணவி பாசிக்குடா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில்
இருந்து மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம் இம் மாணவியை கடத்தியதாக
சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் மூவரை கல்குடா பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும்
களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
எருவில் சிவபுரத்தினை சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவர் தினமும் முச்சக்கர வண்டியில் தனியார் வகுப்புக்கு சென்றுவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை வேறு ஒரு முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் வழமையாக வரும் முச்சக்கர வண்டிக்காரருக்கு காயம் காரணமாக வரமுடியவில்லை. தமது முச்சக்கர வண்டியில் வருமாறு கோரியுள்ளார்.
எருவில் சிவபுரத்தினை சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவர் தினமும் முச்சக்கர வண்டியில் தனியார் வகுப்புக்கு சென்றுவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை வேறு ஒரு முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் வழமையாக வரும் முச்சக்கர வண்டிக்காரருக்கு காயம் காரணமாக வரமுடியவில்லை. தமது முச்சக்கர வண்டியில் வருமாறு கோரியுள்ளார்.
மாணவி குறித்த முச்சக்கர வண்டியில்
சென்றபோது களுவாஞ்சிகுடியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள்
நிரப்பிக்கொண்டிருந்தபோது மேலும் இரு இளைஞர்கள் குறித்த முச்சக்கர
வண்டியில் ஏறியுள்ளனர்.
இதன்போது குறித்த மாணவியின் வாயினையும்
காலினையும் கட்டி மாணவியினை பாசிக்குடா பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பெற்றோருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து களுவாஞ்சிகுடி
பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவே உடனடியாக செயற்பட்ட களுவாஞ்சிடி பொலிஸார்
கல்குடா பொலிஸாருக்கு இது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை மாலை அங்கு சென்ற
களுவாஞ்சிகுடி பொலிஸார் மாணவியை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்துக்கு
அழைத்துவந்ததுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும் அழைத்துவருவதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார்
தெரிவித்தனர்.
பெண்கள் கடத்தி செல்லப்பட்டு பாசிக்குடா
ஹொட்டல்களில் பலாத்காரமாக விபச்சாரம் மேற்கொள்ளப்படும் விடயம் சகல
பொலிஸாருக்கும் தெரிந்த நிலையிலேயே இப்பெண்ணும் பாசிக்குடாவுக்கே கடத்தி
செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே களுவாஞ்சிக்குடி பொலிஸார்
கல்குடா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.