கடைசிவரை நேர்மை- சொத்தை குடும்பத்துக்கும், கட்சிக்கும் பிரித்துக் கொடுத்த மண்டேலா!!!

ஜோகன்ஸ்பெர்க்: முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா தனது சொத்துகள் அனைத்தையும் தன்னுடைய குடும்பம் , பணியாளர்கள், ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் பள்ளிகளுக்கு எழுதி வைத்துள்ளார்..அவருடைய உயிலானது நேற்று பிரித்துப் படிக்கப்பட்டது.
தனது சொத்துகளை குடும்பத்திற்கு மட்டும் அளிக்காமல்,கட்சிக்கும்,தனது பணியாளர்களுக்கும் மண்டேலா கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரிக்கப்பட்ட உயில்:     

சமீபத்தில் காலமான தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும்,கறுப்பின போராளியுமான நெல்சன் மண்டேலாவின் உயில் நேற்று(03.02.2014) படிக்கப்பட்டது.





மண்டேலாவின் மாண்பு:

அதில் அவர் தன்னுடைய 25கோடியே 70லட்சத்து 70ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை தனது குடும்பத்தினர்,பணியாளர்கள்,ஆளும் கட்சி மற்றும் பல்வேறு பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்துள்ளார்.
சிறந்த போராளியாக திகழ்ந்த மண்டேலா தன்னுடையை சொத்துகளையும் மற்றவர்களுக்கே பகிர்ந்தளித்துள்ளார்.


மூன்று அறக்கட்டளைகள்:












இவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும்,மற்றவர்களுக்கும் இந்த சொத்தானது நெல்சனின் மூன்று அறக்கட்டளைகள் மூலம் அளிக்கப்படும் என்று உயிலைப் பிரித்துப் படித்த நீதிபதி டிக்கேங் மோசென்கே கூறியுள்ளார்.

 

       

சர்ச்சை அபாயம்:

ஆனால், இந்த உயிலானது மண்டேலாவின் குடும்பத்தில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த கூடும் என கூறப்படுகிறது.
       

வறுமையிலும் நேர்மை:

வாழ்க்கையில் நேர்மையும்,சத்தியத்தையும் கடைபிடித்து தன்னுடைய 95வது வயதில் மறைந்த மண்டேலாவின் குடும்ப வாரிசுகள் நிஜத்தில் வறுமையில் உள்ளது. தன்னுடைய சுயசரிதையான "சுதந்திரத்திற்கான நெடும்பயணம்" என்ற நூலினால் கிடைத்த வருமானத்தை மட்டுமே அவர் தனது வீட்டிற்காக உபயோகித்தார்.
 
      

மக்கள் தலைவர்:

அவருடைய இந்த உயில் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவருடைய குடும்பத்தினரிடையே பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
************************************