மன்னாரில் பலரை கடனாளிகளாக ஆக்கி விட்ட 'லீசிங்' கம்பனிகளால் பலர் தலைமறைவு!!! எச்சரிக்கை.

யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளில் மன்னாரில் வங்கிகளும்,லீசிங் கம்பனிகளும் பல்கிப்பெருகியுள்ளன. இதன் விளைவாக மன்னார் மக்களும் குறிப்பாக பெண்களும் பெரும் கடன் சுமையில் மூழ்கி தலை மறைவாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மன்னாரில் சுமார் பத்திற்கும்   மேற்பட்ட வங்கிகளும் அதற்குச்சமமாக 'லீசிங்' கம்பனிகளும் கடை விதித்துள்ளன. -இதில் குறிப்பாக லீசிங் கம்பனிகளின் பிரதிநிதிகள் வீடு,வீடாகச் சென்று அங்கு தனிமையில் இருக்கும் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக்கூறி தமது பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றனர்.

இவர்களுடைய ஆசை வார்த்தைகளில் மயங்கிய பெண்கள் முற்பணத்தைக் கொடுத்து பொருட்களை பெற்றுக்கொண்டு மாதாந்த தவணைப்பணத்தை செலுத்த முடியாது அவதிப்படுகின்றனர். இதே வேளை சில லீசிங் கம்பனிகள் சாதாரண பொது மக்களை ஏமாற்றி பல இலட்சம் ரூபாய்க்களுடன் தலைமறைவாகியுள்ளனர். இதன் விளைவாக மன்னார் மக்கள் லீசிங் கம்பனிகளில் நம்பிக்கை இழந்துள்ளனர்.
 
தமிழ்நாட்டில் ஏமாற்று வேலை நடைபெறுவது போல் இலங்கையிலும் ஆரம்பமாகிவிட்டது. ஏமாந்தவர்கள் மீது அனுதாபம் ஏற்படுகின்றது. ஆனால் இது ஒரு பாடம். ஏமாற்றுபவர்கள் திட்டமிட்டே ஏமாற்றுவதென்ற திட்டத்துடனேயே இத்தொழிலில் இறங்குகிறார்கள். பேராசையினால் ஏற்படும் விளைவு. வருமானம் செலவு என்பன கணக்கிடப்பட்டு விதிமுறைகளின் படி அணுக வேண்டிய விடயங்களை எந்தவொரு விதி முறையும் இல்லாது அணுகினால் இதுதான் நிலையாகும்.



.