பேருந்தை தீயூட்டு கொழுத்துவோம் ! மன்னாரில் இருந்து யாழ். ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை ஏற்றி சென்ற சாரதிக்கு தொலைபேசி மிரட்டல் !!!

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஆர்ப்பாட்டம் ஒன்றிற்காக யாழ் சென்றுகொண்டிருந்த மக்களை திசைதிருப்பும் முகமாக பேருந்து சாரதிக்கு இனம்தெரியாத நபர்களினால் விடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு மிரட்டலையடுத்து குறித்த பயணம் தடைப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவது, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இன்று 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ் நகரில் இன்று காலை 10 மணிக்கு போராட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வட மாகாணத்திலுள்ள ஜந்து மாவட்டங்களும் சேர்ந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்திலும் அதேபோன்று சிலாபத்திலும் இன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்திற்காக இன்று மன்னார் பள்ளிமுனை மற்றும் முள்ளிக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலுள்ள மக்கள் இரண்டு பேருந்துகளில் யாழ்ப்பாணம் நோக்கி பயனித்த வேளையில் குறித்த இலுப்பைக்கடவை பகுதியில் வைத்து பேருந்தின் சாரதிக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி மிரட்டலில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பயணத்தை உடன் நிறுத்தி மன்னார் திரும்பவேண்டும் அப்படி திரும்பாவிட்டால் பேருந்தை தீயூட்டுவதாகவும் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு கொலைமிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்கள் யாழ்பாணம் நோக்கிய பயணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இன்நிலையில் பயண ஒழுங்கு தடைப்பட்டதை அடுத்து குறித்த பயணிகளுக்கும் சாரதி நடத்துனர்களுக்கும் இடையில் ஏற்ப்பட்ட பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை அதனை அடுத்து சம்பவ விடயம் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் அருட்தந்தை நேரு இலுப்பைக்கடவை பொலிசார் ஆகியோர் குறித்த விடயம் தொடர்பாக சாரதி நடத்துனருடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர் எனினும் பேச்சுவார்தையில் எது வித முன்னேற்றமும் காணப்படாத நிலையில் ஆர்ப்பாட்டத்திற்காக கலந்துகொள்ள சென்றவர்கள் மீண்டும் மன்னார் திரும்பியுள்ளனர்.